தேடுதல்

ரோல்ஸ் ராய்ஸ் வாகனமும், அந்நிறுவன உயர் இயக்குனரும் ரோல்ஸ் ராய்ஸ் வாகனமும், அந்நிறுவன உயர் இயக்குனரும் 

விதையாகும் கதைகள் : கொள்கையும் கொள்ளையும்

எதையும் இலவசமாக பெறுவது, ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதால், பதவி காலத்தின்போது எதையுமே இலவசமாக வாங்குவதில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

புதிதாக பதவிக்கு வந்த ஓர் அமைச்சருக்கு ஒரு பெரிய தொழிலதிபர் விருந்து வைத்தார். தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார் தொழிலதிபர்.

உடனே அமைச்சர், ''இது ஊழலுக்கு வழி வகுக்கும். நான் என்னுடைய பதவி காலத்தின்போது எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்'' என்றார்.

தொழிலதிபர் உடனே, ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளவேண்டாம். இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக்கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர், ''ரொம்ப மகிழ்ச்சி'' என்று சொல்லிக்கொண்டே, பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, ''அப்படியானால், எனக்கு பத்து கார் கொடுங்கள்'' என்றார்!.

தொழிலதிபர் அசந்து போனார்.

11 September 2020, 14:05