தேடுதல்

கம்போடியாவில் கோவிட் சோதனைகள் கம்போடியாவில் கோவிட் சோதனைகள்  

கோவிட்-19 நோயால் குழந்தைகளின் சத்துணவு பற்றாக்குறை

உலகம் முழுவதும் மேலும் 67 இலட்சம் குழந்தைகள் சத்துணவுப் பற்றாக்குறையால் துன்புறும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டும் யூனிசெஃப் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கடந்த ஏழு மாதங்களாக உலகம் முழுவதும் கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புற்றுவரும் வேளையில், கம்போடியா நாட்டில், இந்நோயின் காரணமாக, சத்துணவு பற்றாக்குறையாலும், குழந்தைகள் துயருறுவதாக, யூனிசெஃப் நிறுவனம் கவலையை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.வின், குழந்தைகளுக்கான அவசரக்கால நிதி அமைப்பான யூனிசெஃப்பின் உயர் இயக்குநர் Henrietta Fore அவர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்தியுள்ள, சமூக, பொருளாதார தாக்கங்களால், கம்போடியா உட்பட, பல ஏழை நாடுகளில், குழந்தைகளிடையே, சத்துணவு பற்றாக்குறை விகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.

உணவு பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், பொருளாதாரம் போன்றவை, இந்த கோவிட்  நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிக அளவு துயர்களை அனுபவிப்பது, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே எனவும் தெரிவித்தார், இயக்குநர்  Fore.

இந்நோயால் உலகம் முழுவதும் மேலும் 67 இலட்சம் குழந்தைகள் சத்துணவுப் பற்றாக்குறையால் துன்புறும் ஆபத்து இருப்பதையும் சுட்டிக்காட்டிய யூனிசெஃப் உயர் இயக்குநர், ஏழை நாடுகளுள் கம்போடியாவின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபடும் உலகின் 12 நாடுகள் பட்டியலில் கம்போடியாவும் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய ஒன்றிப்பு அவையும், ஏழை நாடுகளுக்குரிய சில சலுகைகளை கம்போடியாவிற்கு மறுத்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டுக் குழந்தைகள், சத்துணவின்மையால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2020, 14:17