தேடுதல்

Vatican News
யோகா பயிற்சியில் சிறைக்கைதிகள் யோகா பயிற்சியில் சிறைக்கைதிகள்  (ANSA)

இந்தியாவில் சிறை கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இந்தியாவில், சிறைகளின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டில், 1,339 என்று இருந்த அளவிலிருந்து 2019 ஆண்டில் 1,350 ஆக அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இந்தியச் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக தேசிய குற்றவியல் பதிவு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறைகளில் 4.03 இலட்சம் கைதிகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்கின்றபோதிலும், 4.78 இலட்சம் கைதிகள் வரை வைக்கப்பட்டுள்ளதாக உரைக்கும் இப்பணியகம், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 87 ஆயிரத்து 599 பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது, பணியாளர்களின் பற்றாக்குறை 26 ஆயிரத்து 812 ஆக உள்ளது எனவும் தெரிவிக்கிறது.

நாடு முழுவதும், சிறைகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில், 1,339 என்று இருந்த அளவிலிருந்து 2019 ஆண்டில் 1,350 ஆக அதிகரித்துள்ளது, இதில், 144 மத்திய சிறைகள், 617 துணைசிறைகள், 410 மாவட்டச் சிறைகள், 86 திறந்த வெளி சிறைகள், 41 சிறப்புச் சிறைகள், 31 பெண்கள் சிறைகள், மற்றும், 19 சிறப்புப் பள்ளிகள், உள்ளன.

2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 4.58 இலட்சம் ஆண்கைதிகள் மற்றும் 19,913 பெண் கைதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பணியாற்றுதற்கென்று அனுமதிக்கப்பட்ட சிறை மருத்துவர்களின் எண்ணிக்கை 3,320 ஆக இருக்கவேண்டிய நிலையில், 2019ம் ஆண்டின் நிலவரப்படி, 1,962 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். (Dinamalar)

31 August 2020, 13:58