தேடுதல்

Vatican News
இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்   (AFP or licensors)

இந்தியாவில் கோரோனா இறப்பு விகிதம் 1.79 விழுக்காடாக குறைவு

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 1.79 விழுக்காடாக குறைவு, மீட்பு விகிதம் 76.61 விழுக்காடாக உயர்வு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.79 விழுக்காடாக குறைந்து, நோய் தொற்றில் இருந்து மீட்கப்படுவோரின் விகிதம் 76.61 விழுக்காடாக உயர்ந்ததாக மத்திய நலத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்களின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்த முயற்சியை செய்து வருவதாகவும், கொரோனா நோயாளிகளுக்கான மீட்பு விகிதம் உலகிலேயே இந்தியாவில் உயர்ந்து வருவதாகவும், இறப்பு விகிதம் மிக குறைவு எனவும், மத்திய நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 50 விழுக்காடு, மீட்பு விகிதத்தை விட அதிகமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய நலத்துறை தெரிவிக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 27,13,933 ஆக அதிகரித்துள்ளதான் வழியாக, நாட்டில் கொரோனா மீட்பு விகிதம் 76.61 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் வழியாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாகவும்,  நாட்டில் இறப்பு விகிதம் 1.79 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 35,42,733 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 63,498 எனவும், தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7,65,302 பேர் எனவும் மத்திய நலத்துறை அறிவித்துள்ளது. .(Dinamalar)

31 August 2020, 13:51