தேடுதல்

Vatican News
பயிற்சியளிக்கப்பட்ட நாய் பயிற்சியளிக்கப்பட்ட நாய்   (AFP or licensors)

விதையாகும் கதைகள் : எதுவும் இலவசமில்லை

இலவசங்களை, தாராளமாக வழங்கி, மக்களின் சுயமரியாதையை இல்லாமலாக்கி, அரசியல்வாதிகளை சார்ந்திருக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளிக்கொண்டு செல்கிறது, இன்றைய அரசியல்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு திருடன் ஒரு வீட்டிற்குத் திருடச் சென்றிருக்கிறான். அங்கு ஒரு நாய் இருந்திருக்கிறது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்து கொண்டே இருந்திருக்கிறது.

இவனுக்குத் திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது என்று கவலை. இப்போதே குரைத்தால், அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று எண்ணம்.

யோசித்தவன், முடிவாக, பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசியிருக்கிறான். அதைக் கண்டவுடன், நாய், திருடனை நோக்கிப் பாய்ந்துவர, இருவரும் கட்டிப்பிடித்து உருண்டிருக்கிறார்கள்.

அப்போது, திருடன், நாயிடம், ‘சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக உனக்கு பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன், என்னிடம் ஏன் சண்டை இடுகிறாய்’, என்று கேட்டிருக்கிறான்.

அதற்கு அந்த நாய் சொல்லி இருக்கிறது, ‘நீ சும்மா இருந்தபோது, வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ, அல்லது, நண்பராக, தெரிந்தவராக இருக்குமோ என்று யோசனையாக இருந்தது. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை வழங்கினாயோ, அப்போது உறுதியாகி விட்டது, நீ திருடன் என்று, அதனால்தான்’, என்று சொன்னதாம்.

31 July 2020, 14:05