தேடுதல்

இலங்கையில் பல்லுயிர்களின் சரணாலயமாக விளங்கும், Muthurajawela சதுப்புநிலம் இலங்கையில் பல்லுயிர்களின் சரணாலயமாக விளங்கும், Muthurajawela சதுப்புநிலம் 

இலங்கையின் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதி பாதுகாக்கப்பட...

Muthurajawela சதுப்புநிலத்தில், 209 வகையான விலங்கினங்களும், 194 வகையான மரங்களும், 40 வகையான மீன்களும், 31 வகையான பாலூட்டிகளும், 102 வகையான பறவைகளும், 48 வகையான வண்ணத்துப்பூச்சிகளும் உள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் பல்லுயிர்களின் சரணாலயமாக விளங்கும், Muthurajawela கடற்கரைப் பகுதியிலுள்ள மிகப்பெரிய சதுப்புநிலம் பாதுகாக்கப்படுமாறு, அந்நாட்டின் சூழலியல் ஆர்வலர் ஒருவர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றின் இயக்குனரான Sajeewa Chamikara அவர்கள், இந்த சதுப்புநிலம் பற்றி யூக்கா செய்தியிடம் கூறுகையில், அரசு அதிகாரிகள், இந்த சதுப்புநிலத்தை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளனர் என்றும், 50 ஏக்கர் நிலப்பகுதி நிரப்பப்படும் பணி இடம்பெற்று வருகிறது என்றும் கூறினார்.

Muthurajawela சதுப்புநிலம், இலங்கையிலுள்ள 41 மிக முக்கிய சதுப்புநிலப்பகுதிகளில் ஒன்று எனவும், இந்தப் பகுதி சேதப்படுத்தப்படுவதால், நெகோம்போ நீர்த்தேக்கப் பகுதியில் முட்டையிடும் உயிரினங்களின் வாழ்வு உட்பட, அப்பகுதி மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் என்றும், Chamikara அவர்கள் கூறினார்.

Muthurajawela சதுப்புநிலம், உலக அளவில் முக்கியமான 41 சதுப்புநிலங்களில் ஒன்று என்று, 1996ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி, ஆசிய சதுப்புநிலப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டது என்றும், Chamikara அவர்கள் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த நிலப்பகுதி பாதுகாக்கப்படவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும், பொதுநிலையினர் பலரும், 2017ம் ஆண்டிலே பேரணிகளை நடத்தியுள்ளனர் என்பதும், இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராகவும், இருபெரும் பேரணிகளை அவர்கள் நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

Muthurajawela சதுப்புநிலத்தில், 209 வகையான விலங்கினங்களும், 194 வகையான மரங்களும், 40 வகையான மீன்களும், 31 வகையான பாலூட்டிகளும், 102 வகையான பறவைகளும், 48 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 18 சதுப்புநில தாவர வகைகளும் உள்ளன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2020, 12:40