தேடுதல்

Vatican News
இருள் சூழ்ந்த இடத்தில் எரியும் தெருவிளக்கு இருள் சூழ்ந்த இடத்தில் எரியும் தெருவிளக்கு 

விதையாகும் கதைகள் : தேடுவதிலும் தெளிவு தேவை

முதியவர், "என் வீட்டுக்கருகே இருட்டாக உள்ளது. இங்குதான் கொஞ்சம் வெளிச்சமாக உள்ளது" என்று பதில் சொன்னார். எதை, எங்கே, எப்போது தேடுவது என்பதில் தெளிவு வேண்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு நாள் இரவில், வயதில் முதிர்ந்த ஒருவர், தெரு விளக்கின் கீழ் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற ஓர் இளையவர் அவரிடம், "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்க, அந்த முதியவர், “என் மோதிரத்தைத் தேடுகிறேன்" என்று பதில் சொன்னார். இளையவர், முதியவரோடு சேர்ந்து, சிறிது நேரம் தேடினார். பின்னர், அவர் முதியவரிடம், "உங்கள் மோதிரம் இங்குதான் விழுந்ததென்று நன்கு தெரியுமா?" என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், "என் மோதிரம் வீட்டுக்கருகே விழுந்தது" என்று கூறினார். உடனே, அந்த இளையவர், "பின் ஏன் இங்கே தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டதும், முதியவர், "என் வீட்டுக்கருகே இருட்டாக உள்ளது. இங்குதான் கொஞ்சம் வெளிச்சமாக உள்ளது" என்று பதில் சொன்னார்.

எதை, எங்கே, எப்போது தேடுவது என்பதில் தெளிவு வேண்டும்.

02 June 2020, 12:13