தேடுதல்

அம்பான் புயலின்போது உதவிய இந்திய இராணுவத்தினர் அம்பான் புயலின்போது உதவிய இந்திய இராணுவத்தினர் 

இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கு ஐ.நா. பாராட்டு

ஐ.நா. பொதுச்செயலர் : புயலுக்கு முன்னர் இந்தியாவும் பங்களாதேஷும் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கடலோர மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியது பாராட்டுக்குரியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

அம்பான் புயலுக்கு முன்னர், இந்தியாவிலும் பங்களாதேஷிலும் எடுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்கும்,  இப்புயலுக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கும் தன் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர்.

மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இப்புயலால், இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும், பங்களாதேஷின் கடலோர மக்கள் பலர் உயிரிழந்துள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்ட, ஐ.நா பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில், இந்த இயற்கை பேரிடர், வாழ்க்கையை மேலும் சிரமமாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் ஒருவருக்கொருவர் விலகி நிற்கவேண்டிய இந்த காலக்கட்டத்திலும், இப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இவ்விரு நாடுகளும் ஆற்றிவரும் சேவைகளும், புயலுக்கு முன்னர் இவ்விரு நாடுகளும் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடலோர மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியதும் பாராட்டுக்குரியது என்று கூறினார், ஐ.நா. பொதுச்செயலர்.

இந்தியாவிலும், பங்களாதேஷிலும் இப்புயலால் ஏறத்தாழ 102 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், 1 கோடியே 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2020, 14:13