தேடுதல்

Vatican News
தூரத்தில் தெரியும் கோவில்கள் தூரத்தில் தெரியும் கோவில்கள்  

விதையாகும் கதைகள் : கடவுளுக்கு பிடித்தது எது?

"மக்கள் பசி பட்டினியாக இருக்கும் போது, அவர்களுக்கு உதவி செய்வதை விட்டுட்டு கோவிலுக்கு தங்கச் சிலை தேவையா..? ஏழைகளுக்குச் செய்தது எனக்கே செய்தது" என்றார் கடவுள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பூமியில் இறந்த மக்கள் வரிசையாக மேல் உலகம் சென்று கொண்டிருந்தார்கள். அங்கே கடவுள், மனிதர்களைச் சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

நாம சொர்க்கத்துக்கு போகப் போறோமோ, இல்லை நரகத்துக்குப் போறோமோ, என்று எல்லாரும் பயந்து பயந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு செல்வந்தர் மட்டும் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தார்.

"நான் பூமியில் வாழ்ந்த காலத்தில் கடவுள் விரும்புவது போல் வாழ்ந்திருக்கேன். அதனால சொர்க்கத்துக்குதான் போவேன் என்ற நம்பிக்கை இருக்கு" என்றார், செல்வந்தர். அவர் கடவுளைப் பார்க்க வேண்டிய நேரம் வந்தது. கடவுள் அவரைப் பார்த்ததும், "இவனை நரகத்துக்கு அனுப்புங்கள்" என்று சொன்னார். 

"கடவுளே என்னை ஏன் நரகத்துக்கு அனுப்புறீங்க. உங்களுக்காக நிறைய கோவில் கட்டியிருக்கேன். பல கோவில்ல அபிசேகம் பண்ணியிருக்கேன். அது மட்டுமில்லாம தங்கத்தால உங்க சிலையைச் செய்து கோவிலுக்கு குடுத்திருக்கேன்." என்று வாதிட்டார்.

"மக்கள் பசி பட்டினியா இருக்கும்போது, அவங்களுக்கு உதவி செய்றத விட்டுட்டு கோவிலுக்கு தங்கச் சிலை தேவையா? எனக்கு பிடித்ததைச் செய்யணும், என்னை சந்தோசப்படுத்தணும்னு நினைச்சா ஏழைகளுக்கு உதவி செய்யுங்க. அதுதான் நான் உங்க கிட்ட எதிர்பாக்கிறேன். வேற எதுவும் தேவையில்லை. ஏழைகளுக்குச் செய்தது எனக்கே செய்தது" என்றார் கடவுள்.

01 April 2020, 14:20