தேடுதல்

Vatican News
தக்காளிகள். தக்காளிகள்.  (2020 Getty Images)

விதையாகும் கதைகள் : தானாக வருவதில்லை கவலை

சாதாரணமா என் தோட்டத்தில நிறைய சொத்தை தக்காளிகளும் இருக்கும், அவற்றைத்தான் நான் என் ஆடு மாடுகளுக்குப் போடுவேன்

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த தோட்டத்தில், அமோக தக்காளி விளைச்சலால் ஆனந்தித்துக் கொண்டிருந்தது. அனைத்தும் குண்டு குண்டாக நல்ல தக்காளிகள். விலையும் அபாரமாக இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளருக்குத் திருமணமும் ஏற்பாடாகி இருந்தது. ஆனால் அவர், புதுமாப்பிள்ளைக்குரிய உற்சாகமின்றி சிறிது கவலையோடு காணப்பட்டார். திருமணத்திற்குச் சென்றிருந்த அவரது உறவினர் ஒருவர் அவரிடம், என்ன மாப்ளே, இந்த வருடம் தக்காளி விளைச்சல் அமோகமா இருக்கு, அப்புறம் எதுக்கு சோகமாக இருக்கா.. என்று கேட்டார். அதற்கு அந்த புது மாப்பிள்ளை, சாதாரணமா என் தோட்டத்தில நிறைய சொத்தை தக்காளிகளும் இருக்கும், அவற்றைத்தான் நான் என் ஆடு மாடுகளுக்குப் போடுவேன், ஆனா, இந்த வருடம் விளைச்சலில் எல்லாமே நல்ல தக்காளிகளாக இருக்கு, சொத்தை தக்காளிகள் எதுவுமே இல்லை, இப்போ என் ஆடு மாடுகளுக்கு எதைப் போடுவேன் என்று வருத்தத்தோடு சொன்னார்.

உண்மைதான். நமக்கு கவலை தானாக வருவதில்லை. அது நாமாகத் தேடிக்கொள்வது. (அருள்பணி அந்தோனி சேவியர் சே.ச.)

13 April 2020, 12:53