தேடுதல்

வயது முதிர்ந்தவருடன் துணையாக, நாய்க்குட்டி வயது முதிர்ந்தவருடன் துணையாக, நாய்க்குட்டி 

விதையாகும் கதைகள் : நாய்க்குட்டிக்குத் தெரிந்த அளவு...

வீட்டிலிருந்தவர்கள் தொலைத்துவிட்ட உறவை, தொலைந்துபோன நாய்க்குட்டி, தேடிக் கண்டுபிடித்தது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஒரு வீட்டில் செல்லமாக வளர்ந்துவந்த நாய்க்குட்டி, திடீரெனக் காணாமல்போனது. வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் மூழ்கினர். மனமுடைந்துபோன அவ்வீட்டின் தலைவர், தெருத் தெருவாகத் தேடினார்; தெரிந்தவர்கள் அனைவரிடமும் விசாரித்தார். இறுதியில், காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டு, மாலை தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்றும் கொடுத்தார்.

ஒரு மணி நேரத்தில், அவ்வூரில் இருந்த முதியோர் இல்லத்திலிருந்து அவருக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. முதியோர் இல்லத்து பொறுப்பாளர் அவரிடம், "சார், நாய்க்குட்டி காணவில்லை என்று நீங்கள் தந்த விளம்பரத்தைப் பார்த்தோம். உங்கள் நாய்க்குட்டி இங்குதான் உள்ளது. உங்கள் அம்மாவோடு விளையாடிக் கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

வீட்டிலிருந்தவர்கள் தொலைத்துவிட்ட உறவை, தொலைந்துபோன நாய்க்குட்டி, தேடிக் கண்டுபிடித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2020, 14:59