தேடுதல்

Vatican News
போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் விளையாடுதல் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் விளையாடுதல் 

விதையாகும் கதைகள் : வெற்றி அடைவதற்கு, வெவ்வேறு வழிகள்

இறுதி இலக்கை நெருங்கிய கென்னத், இலக்கைக் கடப்பதற்கு சற்று முன்னதாக நின்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த ஜானி என்ற சிறுவன், இலக்கைக் கடந்து, அப்பந்தயத்தில் வெற்றி பெற்றான்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சிறுவன் கென்னத்தின், இரு கால்களும், போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் பல போட்டிகளில், கென்னத் வெற்றிபெற்று வந்தான்.

ஒருமுறை, அவன் வாழ்ந்த பகுதியில் ஒரு விளையாட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில் நடந்த பந்தயத்தில், கென்னத் முதலிடம் பெற்றான்.

இரண்டாவது பந்தயம் துவங்கியது. அப்பந்தயத்திலும் கென்னத் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருந்தான். பந்தயத்தின் இறுதி இலக்கை நெருங்கியதும், கென்னத் செய்தது, அங்கிருந்தோரை ஆச்சரியம் அடையச்செய்தது. இறுதி இலக்கை நெருங்க, நெருங்க கென்னத் மெதுவாக ஓடி, இலக்கைக் கடப்பதற்கு சற்று முன்னதாக நின்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து ஓடிவந்த ஜானி என்ற சிறுவன், இலக்கைக் கடந்து, அப்பந்தயத்தில் வெற்றி பெற்றான்.

கென்னத் செய்ததைக் கண்ட அவனது தாய், "ஏன் அவ்வாறு செய்தாய்?" என்று அவனிடம் கேட்டார். அதற்கு, கென்னத், "அம்மா, நான் ஏற்கனவே ஒரு கோப்பை வாங்கிவிட்டேன். பாவம் ஜானி. அவன் இதுவரை கோப்பை எதுவும் வாங்கவில்லை. அதனால்தான்" என்று தன் அம்மாவிடம், சொல்லிவிட்டு, ஜானியின் வெற்றியில் பங்கேற்கச் சென்றான்.

வெற்றி அடைவதற்கு, வெவ்வேறு வழிகள் உண்டு.

17 March 2020, 15:49