தேடுதல்

Vatican News
ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்  (AFP or licensors)

உலகளாவிய போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில் மனிதாபிமானப் பணிகளை ஆற்றிவரும் மக்கள், நோயாளிகளுக்கு மருத்துவ மற்றும் ஏனைய உதவிகளை ஆற்றுவதற்கு உதவும் நோக்கத்தில், முதலில் போர் நிறுத்தங்கள் இடம்பெறவேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதகுலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 என்ற பெரிய போரை எதிர்த்திட, ஆயுத மோதல்கள் எனும் நோயைக் கைவிட்டு, அனைவரும் ஒன்றிணைந்திட வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.

மனித குலத்தின் பொது எதிரியான கோவிட்-19 என்ற நோயை எதிர்த்து போரிட, முதலில் உலகின் ஆயுத மோதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த பொதுச்செயலர், மனிதகுல வாழ்வைக் காக்கவேண்டிய போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.

தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில் மனிதாபிமானப் பணிகளை ஆற்றிவரும் மக்கள், நோயாளிகளுக்கு மருத்துவ மற்றும் ஏனைய உதவிகளை ஆற்றுவதற்கு உதவும் நோக்கத்தில், முதலில் போர் நிறுத்தங்கள் இடம்பெறவேண்டியது அவசியம் என்றார், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ்

நிறம், இனம், தேசியம் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவரையும் தாக்கிவரும் இந்நோயிலிருந்து மனித குலத்தை காப்பாற்றவேண்டிய ஒவ்வொருவரின் கடமையை வலியுறுத்தியுள்ளார், பொதுச்செயலர் கூட்டேரஸ். (UN)

24 March 2020, 15:55