தேடுதல்

ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் போன் 

பாதுகாப்பான இணையதள உலக நாள், பிப்ரவரி 11

இணையதளங்களைப் பார்ப்பதால், ஐந்து மாணவர்களுக்கு ஒருவர், பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் - யுனிசெப்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் 13 வயதுக்கும், 15 வயதுக்கும் உட்பட்ட மாணவர்களில் மூன்று பேருக்கு ஒருவர், இணையதளங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று, ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பான யுனிசெப் எச்சரித்துள்ளது.  

பிப்ரவர் 11, இச்செவ்வாயன்று, பாதுகாப்பான இணையதள உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு கூறியுள்ள யுனிசெப் அமைப்பு, முப்பது நாடுகளில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் இளைஞர்களிடம் எடுத்த ஆய்வின்படி, மூன்று பேரில் ஒருவர், இணையதளங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்ததாக அறிவித்துள்ளது.     

இணையதளங்களைப் பார்ப்பதால், ஐந்து மாணவர்களுக்கு ஒருவர், பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் என்று, யுனிசெப் அமைப்பின் இத்தாலிய கிளைத் தலைவர் Francesco Samengo அவர்கள் தெரிவித்தார்.

அச்சுறுத்தும் வகையில் செய்திகளை அனுப்புவது பொதுவாக சமுதாய வலைத்தளங்களில் நிலவுகின்றன என்று, எழுபது விழுக்காட்டு மாணவர்கள் கூறியவேளை, இத்தகைய செய்திகள் அனுப்பப்படுவதை நிறுத்துவது அரசுகளின் கடமை என்று, ஏறத்தாழ 32 விழுக்காட்டு மாணவர்கள் நம்புகின்றனர் என்று யுனிசெப் கூறியுள்ளது.    

மேலும், இத்தகைய செய்திகளுக்கு இளைஞர்கள் பொறுப்பு என 31 விழுக்காட்டினரும், இணையதள நிறுவனங்கள் பொறுப்பு என 29 விழுக்காட்டினரும், அந்த ஆய்வில் தெரிய வந்ததாக, யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு குழந்தை வன்முறையால் இறக்கின்றது, மேலும் ஏராளமானோர், அடிபடுவதிலிருந்து இணையதள அச்சுறுத்தல் செய்திகள் வரையிலான, உடல், பாலியல், உளவியல் சார்ந்த வன்முறைகளின் வடுக்களைக் கொண்டுள்ளனர் என்றும், Francesco Samengo அவர்கள் கூறியுள்ளார்.

உலகில் பணம்படைத்த நாடுகளில் 15 வயதுக்கும், 24 வயதுக்கும் உட்பட்ட இளைஞர்களில் 94 விழுக்காடும், கடும் வறிய நாடுகளில் அதே வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 65 விழுக்காடும் இணையதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று, உலகளாவிய தொலைத்தொடர்புகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2020, 14:55