தேடுதல்

Vatican News
இந்தியாவில் சாலையோரம் வாழும் வறியோர் இந்தியாவில் சாலையோரம் வாழும் வறியோர்  (AFP or licensors)

உலகெங்கும் அதிர்ச்சியூட்டும் பொருளாதார சமத்துவமின்மை

உலக அளவில் 22 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு என்பது, ஆப்ரிக்காவில் உள்ள அனைத்து பெண்களின் சொத்து மதிப்பை விட அதிகமாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் 70 விழுக்காட்டு ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 விழுக்காட்டு பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 4 மடங்கு அதிகம் என அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரத்தில் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 50வது ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், 460 கோடி (உலக மக்கள் தொகையின் 60 விழுக்காடு) மக்களை விட அதிகமான சொத்து மதிப்பை கொண்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில், 63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2018-19ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.24.42 இலட்சம் கோடி மதிப்பை விட அதிகமாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

உலகளாவிய சமத்துவமின்மை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது எனவும், கடந்த பத்தாண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், இந்த அறிக்கை கோடிட்டு காட்டுகின்றது.

உலக அளவில் 22 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு என்பது, ஆப்ரிக்காவில் உள்ள அனைத்து பெண்களின் சொத்து மதிப்பை விட அதிகமாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

20 January 2020, 15:45