தேடுதல்

Vatican News
தமிழர் திருநாள் தமிழர் திருநாள்   (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – தமிழர் திருநாள் சிறப்பு

இல்லத்தை, உள்ளத்தைப் புதுப்பிக்கும் நிகழ்வு, போகித் திருநாள். ஒளிரும் சூரியனை வழிபடும் நிகழ்வு தைப்பொங்கல். பொன்னான கால்நடையைப் போற்றிடும் நிகழ்வு, மாட்டுப்பொங்கல், அந்நாளே திருவள்ளுவர் தினமுமாகும். உறவுகளுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு காணும் பொங்கல்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்பு இதயங்களே, விகாரி வருடம், தை மாதத்தின் முதல் நாளாகிய, சனவரி 15, இப்புதனன்று, தமிழர் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும், தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. சோழர் காலத்தில், பொங்கல் பண்டிகைக்கு, ஆண்டின் முதல் அறுவடை என்ற பொருளில், புதியீடு என்ற பெயர் இருந்துள்ளது. அக்காலத்தில் விவசாயிகள், தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொண்டுள்ளனர். இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று சொல்கிறார்கள். இந்த தமிழர் திருநாள், தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழகத்தின் பெரும்பகுதி விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி விளைச்சலின்றி மிகவும் துன்புற்றவேளை, கடந்த ஆண்டில் பெய்த மழையால், இந்நாள்களில் விவசாயிகள் பலர், மகிழ்வோடு அறுவடை செய்து வருகின்றனர். எனவே, இந்த ஆண்டு அறுவடைத் திருநாளில், விவசாயிகள், நல்ல அறுவடையை அளித்த கடவுளுக்கு நன்றி சொல்கின்றனர். நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, சனவரி 14, இச்செவ்வாயன்று தொடங்குகின்றது. இப்பண்டிகை பற்றி இன்று நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி அருள் ஜான் போஸ்கோ, வேலூர் மறைமாவட்டம்.

வாரம் ஓர் அலசல்: தமிழர் திருநாள் சிறப்பு-அ.பணி போஸ்கோ
13 January 2020, 15:12