தேடுதல்

Vatican News
இலங்கையில் காணாமல்போனவர்களைத் தேடுகின்றனர் இலங்கையில் காணாமல்போனவர்களைத் தேடுகின்றனர்  

20,000 பேர் இறந்தனர் என்ற அறிவிப்பு, பொறுப்பற்ற செயல்

இலங்கையில் உள்நாட்டுப் போரில் காணாமல்போன 20 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர் என்று சொல்கையில், அவர்கள் எப்படி, எங்கே, எப்பொழுது, யார் கைகளில் காணாமல்போனார்கள் போன்ற விவரங்கள் அறிவிக்கப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் உள்நாட்டுப்போரில் காணாமல்போன இருபதாயிரம் பேர் இறந்துவிட்டனர் என்று, அப்போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் சென்று, அரசுத்தலைவர் கோத்தபாய ராஜபக்சே அவர்கள் கூறியிருப்பது, பொறுப்பற்றதன்மையைக் காட்டுகின்றது என்று, மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை அரசுத்தலைவர் கோத்தபாய ராஜபக்சே அவர்களின் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ள, இலங்கை கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும், மனித உரிமை ஆர்வலர்கள், இந்த அறிவிப்பு, மற்றவரின் உணர்வுகள் மீது அக்கறை காட்டாததுபோல் உள்ளது என்று கூறியுள்ளனர்.

காணாமல்போனவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு, மிகுந்த கவலையுடன் தொடர்ந்து விண்ணப்பித்துவரும் குடும்ப உறுப்பினர்களிடம், எப்படி, எங்கே, எப்பொழுது, யார் கைகளில் போன்ற விவரங்களைத் தெரிவிக்காமல், வெறுமனே இவ்வாறு அரசுத்தலைவர் அறிவித்திருப்பது கவலையளிக்கின்றது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து, ஆசியச் செய்தியிடம் பேசிய கண்டி மறைமாவட்ட மனித உரிமை அலுவலக இயக்குனர் அருள்பணி நம்தனா மத்துங்கா அவர்கள், அரசுத்தலைவர் காணாமல்போனவர்கள் பற்றிய இத்தகவலை எவ்வாறு பெற்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். (AsiaNews)

28 January 2020, 15:27