தேடுதல்

Vatican News
உலகின் நிலப்பரப்பில், 27 விழுக்காட்டை கொண்டுள்ள மலைகள் உலகின் நிலப்பரப்பில், 27 விழுக்காட்டை கொண்டுள்ள மலைகள் 

டிசம்பர் 11 - அகில உலக மலை நாள்

ஐ.நா. அவையின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, 'இளையோருக்கு மலைகள் அவசியம்' என்ற கருத்துடன் அகில உலக மலை நாளைச் சிறப்பித்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 11, இப்புதனன்று, அகில உலக மலை நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஐ.நா. அவையின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, 'இளையோருக்கு மலைகள் அவசியம்' என்ற கருத்தை இந்நாளின் மையக்கருத்தாக வழங்கியது.

உலகின் நிலப்பரப்பில், 27 விழுக்காட்டை கொண்டுள்ள மலைகள், நீடித்து நிலைக்கும் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன என்று FAO நிறுவனம் அறிவித்துள்ளது.

மலைகளிலிருந்து உருவாகும் இயற்கைச் செல்வங்கள், உலகெங்கும், மலைகளில் வாழும் 11 கோடி மக்களுக்கு மட்டுமல்ல, சமவெளியில் வாழும் மக்களுக்கும் பெரும் உதவியாக உள்ளன என்று கூறும் FAO நிறுவனம், சுத்தமான நீர், உணவு, சுத்தமான எரிசக்தி, மற்றும் பொழுதுபோக்கு என்ற பல கோணங்களில் மலைகள் வழங்கும் கொடைகளை மக்கள் நினைவுகூர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

மலைகளைப் பற்றிய தெளிவை, குழந்தைகளுக்கும், இளையோருக்கும் உணர்த்தவும், தற்போது பருவநிலை குறித்து எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு, மலைகள் தகுந்த தீர்வுகள் தரும் என்பதை இளைய தலைமுறையினர் உணரவும், கல்வி வழியே, வழிகள் செய்யப்படவேண்டும் என்று FAO நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. (UN)

11 December 2019, 15:50