தேடுதல்

Vatican News
மரங்கள் தரும் கனிகள் தெருவெங்கும் மரங்கள் தரும் கனிகள் தெருவெங்கும்  (ANSA)

பூமியில் புதுமை : வருங்காலத் தலைமுறையை எண்ணிப்பாருங்கள்

மர நிழலும், நாம் உண்ணும் பழங்களும் நம் முன்னோர்கள் நட்டு வைத்த மரங்களிலிருந்தே நமக்குக் கிட்டுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒரு மன்னர் தனது நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அவரது கண்களில், ஒரு முதியவர், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மரக்கன்றை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே மன்னர், "முதியவரே! உங்களுக்கோ மிகவும் வயதாகிவிட்டது. இந்த மரக்கன்று வளர்ந்து, மரமாகி, கனி தர பல ஆண்டுகள் ஆகும். அதனால் உங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லையே. நீங்கள் ஏன் உங்கள் உடலை, வெயிலில் வருத்தி இம்மரத்தை நடுகிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், "மன்னா! இதோ நாம் நிற்கும் இந்த மர நிழலும், நாம் உண்ணும் இப்பழங்களும் நம் முன்னோர்கள் நட்டு வைத்தவையே. எனவே நமது சந்ததியினருக்கு நாம் நட்டுவைத்தால்தானே பயன் கிடைக்கும்?'' என்று பதில் அளித்தார். மன்னர், அப்பதிலை கேட்டு மிகவும் மகிழ்ந்தார். "தன்னை நேசித்த இதயத்தை ஒரு போதும் இயற்கை கைவிட்டதில்லை' என்ற கவிஞரின் வரிகளுக்கேற்ப வாழ்ந்த அம்முதியவரை, மன்னர் அவரது அரசவைக்கு அழைத்துச் சென்று பாராட்டினார். நம்மில் எத்தனை பேர் நம் வருங்கால தலைமுறையைக் குறித்து எண்ணிப் பார்க்கிறோம்?

11 December 2019, 15:58