தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் தீவு கிறிஸ்மஸ் தீவு  

பூமியில் புதுமை: கிறிஸ்மஸ் தீவின் சிறப்பு

கிறிஸ்மஸ் தீவிலுள்ள தேங்காய் நண்டுகள் 3 அடி நீளத்துடன், 4 கிலோ எடை கொண்டதாக உள்ளன. இவை தங்களின் ஒரு காலால், ஒரு தேங்காயை உடைக்கும் திறன்படைத்ததாக உள்ளனவாம்

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்மஸ் தீவு என்பது, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப் பகுதியாகும். இத்தீவு, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 2,600 கி.மீ. வடமேற்கிலும், ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. 1643ம் ஆண்டில், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ராயல் மேரி என்ற கப்பலின் தலைவர் மாலுமி William Mynors என்பவர், கிறிஸ்மஸ் நாளில் இத்தீவைக் கடந்து செல்கையில், அதற்கு கிறிஸ்மஸ் தீவு எனப் பெயரிட்டார்]. 1666ம் ஆண்டில் இத்தீவின் வரைபடம், டச்சு நிலப்பட வரைஞர் Pieter Goos என்பவரால் வெளியிடப்பட்டது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 65 விழுக்காட்டுப் பகுதி மழைக்காடுகள் ஆகும். இத்தீவிற்கே உரிய பல அரியவகை உயிரினங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தீவிலுள்ள மரவடை, மற்றும், மாவடை உயிரினங்கள், அறிவியலாளர் மற்றும், இயற்கை ஆர்வலர்களை அதிகமாகக் கவர்ந்திழுக்கின்றன. மேலும், கிறிஸ்மஸ் தீவிலுள்ள தேங்காய் நண்டு உயிரினம், புகழ் பெற்றதாகும். இந்த வகை நண்டுகள் 3 அடி நீளத்துடன், 4 கிலோ எடை கொண்டதாக உள்ளன. இவை தங்களின் ஒரு காலால், ஒரு தேங்காயை உடைக்கும் திறன்படைத்ததாக உள்ளனவாம். மேலும், கிறிஸ்மஸ் தீவில் பாஸ்பேட் கனிம வளம் அதிகமாகவுள்ளது. இந்த கனிமத்தை வெட்டி எடுக்கும் சுரங்கம் 1899ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. உயிரினங்கள் காணப்படுகின்றன. 2016ம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, இத்தீவில் 1,843 பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், சீனா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் தலைமுறைகள் ஆவர்.

26 December 2019, 14:33