தேடுதல்

2020ம் ஆண்டை வரவேற்க மாஸ்கோவில் செய்யப்பட்டுள்ள அலங்காரம் 2020ம் ஆண்டை வரவேற்க மாஸ்கோவில் செய்யப்பட்டுள்ள அலங்காரம் 

பூமியில் புதுமை : கடந்த கால தவறுகளைக் களைவோம்

ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன. இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால் விடும் நிலைகள் வளர்ந்துள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஓர் ஆண்டைக் கடந்துவருவதென்பது அத்தனை எளிதானதல்ல. வெற்றி, தோல்வி, இலாபம், நஷ்டம், உறவில் மகிழ்ச்சி, பிரிதலில் துயரம் எனப் பல வண்ணங்கள் கலந்த ஓவியம் போன்றது ஓர் ஆண்டு. பல வேளைகளில் மகிழ்ச்சிகள் உடனே கடந்துவிடுகின்றன. ஆனால் துயரமோ நீண்ட காலம் மனதுக்குள்ளேயே தங்கி புழுங்கிக் கிடக்கிறது. அத்தகைய துயரங்களில் இருந்து மீண்டு, வாழ்வை நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் நாம். இன்றைய நிலைகளை உற்று நோக்குங்கள். ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன. இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால் விடும் நிலைகள் வளர்ந்துள்ளன. ஜாதி, மத, மூடநம்பிக்கை உள்ளிட்ட சமூகத் தீமைகள் இன்னும் ஒழிந்து விடவில்லை, மாறாக, மனிதநேயம், சமூக நீதி, பாலியல் நீதி போன்றவைதான் ஆதரவின்றி அநாதையாக உள்ளன. 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று சொன்னவர் திருவள்ளுவர். 'முயற்சித் திருவினையாக்கும்' என்பதை நினைவில் கொள்வோம். இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் நீங்கி, மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும் என நம்புவோம். ஆண்டின் இறுதி நாட்களில் இருக்கும் நாம், வளர்ச்சியும், மலர்ச்சியும் நிறைந்த புதிய தொடக்கத்தை நோக்கி நடைபோடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2019, 15:50