தேடுதல்

Vatican News
அமேசான் பகுதி மக்களுடன் வத்திக்கானில் திருத்தந்தை அமேசான் பகுதி மக்களுடன் வத்திக்கானில் திருத்தந்தை  (ANSA)

பூமியில் புதுமை – அமேசான் மாமன்றத்திற்காக மன்றாடுவோம்

பூமிக்கோளத்தின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர் நடுவே, நற்செய்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் புதிய வழிகள்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

2017ம் ஆண்டு, அக்டோபர் 15ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பகுதியில் பணியாற்றும் ஆயர்கள், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

"நமது பூமிக்கோளத்தின் நுரையீரல் என்ற அடிப்படை குணத்தைப் பெற்றுள்ள அமேசான் காடுகள் சந்தித்துவரும் நெருக்கடியானச் சூழலுக்கு தகுந்த தீர்வுகள் காண்பதும், அமைதி நிறைந்த ஓர் எதிர்காலத்தை இழந்து, அப்பகுதியில் வாழும் பழங்குடியினர் நடுவே, நற்செய்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் புதிய வழிகளை கலந்து பேசுவதும், இந்த சிறப்பு மாமன்றத்தின் முக்கிய குறிக்கோள்" என்று, திருத்தந்தை தன் அழைப்பில் கூறினார்.

திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள ஆயர்கள், அமேசான் பகுதியில் வாழும் பழங்குடியினரின் பிரதிநிதிகள், மற்றும் அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்த சிறப்பு ஆயர் மாமன்றம், அக்டோபர் 6, இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ளது. அடுத்து, மூன்று வாரங்கள் நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்ளும் அனைவரையும், தூய ஆவியார் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம்.

05 October 2019, 12:07