தேடுதல்

யூனிசெப் இயக்குனர் Henrietta Fore யூனிசெப் இயக்குனர் Henrietta Fore 

இக்கால, வருங்காலச் சிறார்க்கு யூனிசெப் இயக்குனர் திறந்த மடல்

ஏழ்மை, சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும், ஒதுக்கி வைக்கப்படுதலால், ஒவ்வோர் ஆண்டும், இலட்சக்கணக்கான சிறார்க்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறார் உரிமை பாதுகாப்பு குறித்த உலகளாவிய ஒப்பந்தம் கொணரப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, இக்கால மற்றும், வருங்காலச் சிறார்க்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார், யூனிசெப் எனப்படும் ஐ.நா. நிறுவனத்தின் சிறார் நல அமைப்பின் இயக்குனர் Henrietta Fore.

வருகிற நவம்பரில் இந்த முப்பதாம் ஆண்டு நிறைவுறுவதைக் குறிப்பிட்டுள்ள ஹென்ரியெட்டா அவர்கள், சிறாரின் வருங்காலம் பற்றி தான் கவலைப்படுவதற்கு எட்டு காரணங்களும், சிறாரின் வருங்காலத்தில் நம்பிக்கை இருப்பதற்கு எட்டு காரணங்களும் உள்ளன என்று, அந்த மடலில் எழுதியுள்ளார்.

சிறார்க்கு, சுத்தமான தண்ணீரும், பாதுகாப்பான காலநிலையும் தேவைப்படுகின்றன,  போர்கள் மற்றும், ஆபத்தான பகுதிகளில், நான்கு சிறார்க்கு ஒருவர் வாழ்கின்றனர், மனநலம் பற்றி பேசுவதற்கு நாம், ஆம் எனச் சொல்ல வேண்டும், பிறந்த இடங்களைவிட்டு, 3 இலட்சத்திற்கு அதிகமான சிறார் புலம்பெயர்ந்துள்ளனர், சிறாரின் வருங்காலம் குறித்து இப்போதே நடவடிக்கை எடுக்காவிடில், சிறாரில் ஆயிரக்கணக்கானோர் அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் வாழவே இயலாது, சிறார்க்கு, 21ம் நூற்றாண்டு பொருளாதாரத்திற்கு, 21ம் நூற்றாண்டு திறமைகள் தேவைப்படுகின்றன, சிறாரின் டிஜிட்டல் பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும், சிறார், குடிமக்களின் நம்பிக்கை நிறைந்த தலைமுறையாகத் திகழ வேண்டும்... என, சிறார் பற்றிய கவலை மற்றும் எதிர்பார்ப்புக்களைக் குறிப்பிட்டுள்ளார், ஹென்ரியெட்டா.

ஏழ்மை, சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும், ஒதுக்கி வைக்கப்படுதலால், ஒவ்வோர் ஆண்டும், இலட்சக்கணக்கான சிறார்க்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன, ஒவ்வொரு நாளும், ஐந்து வயதுக்குட்பட்ட 15 ஆயிரம் சிறார் இறக்கின்றனர், இந்த மரணங்கள் பெரும்பாலும் தடுத்துநிறுத்தகூடிய நோய்களால் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளார், ஹென்ரியெட்டா.

சிறார் உரிமைகள் ஒப்பந்தத்தின் முப்பது ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கையில் அடுத்த முப்பது ஆண்டுகள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், இன்றைய சிறார் மற்றும், இளையோருக்கு அனைவரும் செவிமடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார், யூனிசெப் இயக்குனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2019, 17:10