தேடுதல்

Vatican News
சிறு மண் பானைகள் சிறு மண் பானைகள் 

பூமியில் புதுமை : மண்சட்டியில் திருமண விருந்து

நமது பாராம்பரியத்தின் அடையாளமாக மண்பாண்டங்கள் இருந்தன என்பதை நினைவுப்படுத்த மண் சட்டியில் உணவுண்ட புதுமண தம்பதியர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

அண்மைக் காலமாக தமிழக இளையோர் பழமையையும், பாரம்பரியத்தையும் நினைவுகூர்ந்து அதன் அடிப்படையில் தங்கள் திருமணத்தை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஒரு தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்தனர். அதேபோல் தற்போது புலிப்பனத்தில் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்கள் மண்சட்டியில் விருந்து சாப்பிட்டு, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் கல்லாம்பொற்றையை சேர்ந்த சுஜினுக்கும் புலிப்பனத்தை சேர்ந்த அனுஷாவுக்கும் அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த மதிய விருந்தில் கலந்துகொண்ட உறவினர்கள், மற்றும், நண்பர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. இதற்கு மாற்றாக, மணமக்கள் ஆசைப்பட்டது போல் இருவருக்கும் மண்சட்டியில் உணவு பாரிமாறப்பட்டு, அதை மணமக்கள் சாப்பிட்டனர். இதுபற்றி மணமக்கள் கூறும்போது, மனிதர் இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் இதை உதாரணப்படுத்தியுள்ளோம். இயற்கை முறைப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மண்பாண்டங்கள் நமது பாரம்பரியத்தின் அடையாளமாக இருந்தன. அதை நினைவுப்படுத்தத்தான் மண் சட்டியில் சாப்பிடுகிறோம் என்றனர்.

20 September 2019, 15:25