தேடுதல்

Vatican News
உரிமைக்காக போராடும் பிரசில் பார்வீக இன பெண்டிர் உரிமைக்காக போராடும் பிரசில் பார்வீக இன பெண்டிர் 

மனிதாபிமான பெண் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

உலகளவில், 2,50,000 பெண்கள், மனிதாபிமானப் பணிகளை ஆற்றி வருகின்றனர். 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, 4,500க்கும் அதிகமான, இருபால் மனிதாபிமானப் பணியாளர்கள், பணிகளின்போது பல்வேறு துன்பங்கலை அனுபவித்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனிதநேய உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட, ஐ.நா. நிறுவன பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், பெண்களின் மனிதாபிமானச் சேவைகள்,  உடனடியாக உதவிகள் தேவைப்படும் இலட்சக்கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும், சிறாரின் வாழ்வில், அளப்பரிய மாற்றத்தைக் கொணர்கின்றன என்று பாராட்டியுள்ளார்.

கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இருப்பது முதல், நோய்கள் பரவும் சூழல்கள் வரை, எல்லாவித துன்பச் சூழல்களில் பெண் மனிதாபிமானப் பணியாளர்கள், முன்னணியில் நிற்கின்றனர் என்றும் கூறியுள்ளார், கூட்டேரெஸ்.

பிரச்சனைகள் நிறைந்த இடங்களில், மனிதாபிமான பெண் பணியாளர்களின் இருப்பு, துயர்துடைப்பு உதவிகள் விரைவாக நடைபெற உதவுகின்றது என்று பாராட்டியுள்ள கூட்டேரெஸ் அவர்கள், அவசரகாலங்களில் அதிகரித்துவரும் பாலின வன்முறையிலிருந்து, பெண்கள் தப்பிப்பதற்கு, இம்மனிதாபிமானப் பெண்களின் உதவிகள் பெரிதும் உதவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஆபத்தான சில பகுதிகளில், பிரச்சனைகளில் சிக்கியுள்ள வலுவற்ற மக்களின் வாழ்வைப் பாதுகாக்கும் வழிகளில், அம்மக்களுக்கு ஆதரவளித்து பணியாற்றும்  பல்லாயிரக்கணக்கான பெண்களை, ஐ.நா. நிறுவனம், இத்திங்களன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கவுரவித்தது.

2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, 4,500க்கும் அதிகமான, ஆண் மற்றும் பெண் மனிதாபிமானப் பணியாளர்கள், பணிகளின்போது கொல்லப்பட்டுள்ளனர், கைதுசெய்யப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர் மற்றும், கடத்தப்பட்டுள்ளனர். 42 நாடுகளில், 13 கோடியே 20 இலட்சம் பேருக்கு ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் தேவைப்படுகின்றன. (UN)

19 August 2019, 15:29