தேடுதல்

Vatican News
சாக்கடல் சாக்கடல்  (AFP or licensors)

40 ஆண்டுகளுக்குள் சாக்கடல் மறையக்கூடும் ஆபத்து

சாக்கடலின் நீர்மட்டம், ஆண்டுக்கு, ஒன்றரை மீட்டர் வீதம் குறைந்து வருகின்றது, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, அதன் நீர்மட்டம், 35 விழுக்காடு குறைந்துள்ளது - சூழலியலாளர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

புனித பூமியிலுள்ள சாக்கடலின் நீர்மட்டம் குறைவதையும், அதன் கடற்கரை வேகமாக அழிந்துவருவதையும் தடுப்பதற்கு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், அடுத்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் சாக்கடல் மறையக்கூடும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்று, சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு, ஜோர்டன் டைம்ஸ் இதழ் ஆசிரியர் பகுதியில் எழுதியுள்ள வல்லுனர்கள் குழு ஒன்று, சாக்கடலின் சூழலியல் பாதுகாக்கப்படுமாறு, அண்மை ஆண்டுகளாக, தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவது குறித்து குறிப்பிட்டுள்ளது.

புவியியல் அமைப்பில், சாக்கடல் தனித்துவமிக்க அமைப்பைக் கொண்டுள்ளது எனவும், சாக்கடல் பகுதி அரசுகளும், உலகளாவிய நிறுவனங்களும், அக்கடலின் நிலைமை குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை எனவும், அக்குழு கூறியுள்ளது.

சாக்கடல் காலியாக்கப்பட்டு வருவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக, Sdom ல், பொட்டாசியம் எடுக்கும் இஸ்ரேல் நிறுவனத்தைக் குறை கூறியுள்ளனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். (AsiaNews)

17 August 2019, 15:05