தேடுதல்

Vatican News
நகரங்களில் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சிகள் நகரங்களில் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சிகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : மண்ணில் கால்படாமலேயே வாழும் நகர மக்கள்

மனிதன் இன்றியும் இயற்கைத் தனித்து இயங்கும். ஆனால், இயற்கையின்றி மனிதனால் தனித்து இயங்க இயலுமா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

புவி வெப்பம் அடைதல், காடுகள் அழிக்கப்படுதல், கார்பன் வெளியேற்றம் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. உலகம் முழுவதும் அனைத்துப் பெருநகரங்களும் மாசுக்கேடு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. 2050ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர், நகரங்களுக்கு குடிபெயர்வர் என்கிறது ஓர் ஆய்வு. நகரங்களில் வாழ்க்கை என்றுமே இயற்கையுடன் ஒன்றியதாக இருந்ததில்லை. பெய்ஜிங், டோக்கியோ போன்ற பெருநகரங்களில் வாழும் ஒரு மனிதர், தன் வாழ்நாளில் மண்ணில் கால்வைக்காமலேயே வாழ இயலும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது, நகரங்களில் மனிதர் எவ்வாறு இயற்கையை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டனர் என்பதைக் காட்டுகின்றது.

மனித உயிர் வாழ்க்கைக்கு இயற்கை சூழலும் அதில் உள்ள உயிரினங்களும் இன்றியமையாதவை. மனிதன் இன்றியும் இயற்கைத் தனித்து இயங்கும். ஆனால், இயற்கையின்றி மனிதனால் தனித்து இயங்க இயலாது. (சலேசிய செய்தி மலர்) 

26 July 2019, 13:51