தேடுதல்

Vatican News
வாழைத்தோப்பு வாழைத்தோப்பு  (AFP or licensors)

பூமியில் புதுமை : வீட்டுக்கு பத்து மரம்

வீட்டுக்குப் பத்து மரங்கள் இருந்தால், ஒருவர்கூட பசியுடன் தூங்கச் செல்லமாட்டார் என்கிறார் நம்மாழ்வார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மரங்களின் தேவை மனிதருக்கு அத்தியாவசியமான ஒன்று. மழை தருவது மட்டுமல்ல, பறவைகளின் தங்குமிடமாகவும், காய்ந்த இலைகள் வழியாக மண்ணுக்கு உரம் தருவதாகவும், வெயிலுக்கு நிழல் தருவதாகவும் உள்ளன மரங்கள். இவற்றோடு, காற்றை சுத்தப்படுத்துபவைகளாகவும், நம் உணவுத் தேவைகளை நிறைவேற்றுபவைகளாகவும்கூட உள்ளன. இதை, இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார் அழகாக எடுத்துக் கூறுகிறார். ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் பத்து மரங்கள் இருக்க வேண்டும். வீட்டின் முன் ஒரு வேப்ப மரமும், பக்கத்தில் ஒரு முருங்கை மரமும், பப்பாளி மரமும் இருக்க வேண்டும். குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரமும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரமும், எலுமிச்சை மரமும் இருக்க வேண்டும். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடியும் இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரமும் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரமும் வைக்க வேண்டும்.  ஒரு மா மரமும் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்கமாட்டார் என்கிறார் நம்மாழ்வார்

05 June 2019, 15:22