தேடுதல்

Vatican News
பங்களாதேஷில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கும் ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களில் இறந்தோர் நினைவாக ஊர்வலம் பங்களாதேஷில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கும் ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களில் இறந்தோர் நினைவாக ஊர்வலம்  (AFP or licensors)

தொழிலாளரின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு உலக நாள், ஏப்ரல் 28

அனைத்து பணியாளர்களுக்குத் தரமான வேலையை ஊக்குவிக்கவும், தொழில் தரத்தை உயர்த்தவும், தொழில் சார்ந்த கொள்கைகளை வளர்க்கவும், பணியாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் ILO அமைப்பு உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தொழிலாளரின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு உலக நாள், ஏப்ரல் 28, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ILO எனப்படும் உலக தொழில் அமைப்பு உருவாக்கப்பட்ட நூறாம் ஆண்டு 2019ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, இவ்வாண்டு இந்த உலக நாளின் நிகழ்வுகள், கடந்த நூறு ஆண்டுகளில் பணியாளர்களின் உரிமைகளையும், நலவாழ்வையும் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கு இந்த அமைப்பு ஆற்றிய நற்செயல்கள் கோடிட்டு காட்டப்படும் என, அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

பணியின்போது இடம்பெற்ற விபத்துகள் அல்லது பணி தொடர்புடைய நோய்களால், உலகில், ஒவ்வொரு நாளும் 6,300 பேரும், ஆண்டுக்கு 23 இலட்சத்துக்கு அதிகமானோரும் உயிரிழக்கின்றனர் என்று, ILO அமைப்பு கூறியுள்ளது.

வேலை செய்யும்போது, ஒவ்வோர் ஆண்டும், 31 கோடியே 70 இலட்சம் விபத்துகள் இடம்பெறுகின்றன என்றும், இதனால் பணியாளர்கள் நீண்ட நாள்கள், வேலைக்கு வர இயலாமல் உள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.   

1919ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ILO உலக தொழில் அமைப்பில் 187 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. (UN)

27 April 2019, 15:50