தேடுதல்

இராணுவ பீரங்கி வண்டி இராணுவ பீரங்கி வண்டி 

ஆயுத உற்பத்தியில் முன்னணி நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு

உலகின் மொத்த ஆயுத உற்பத்தியில் 75 விழுக்காடு, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா என்ற 5 நாடுகளில் இருந்து வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயுத உற்பத்தியில் உலகிலேயே முன்னணி நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்குவதாகவும், அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக சவுதி அரேபியா இருப்பதாகவும் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டுக்கும் 18க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட கனரக ஆயுத வியாபாரம், அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளைவிட 7.8  விழுக்காடு அதிகரித்திருந்ததாகக் கூறும், உலகளாவிய அமைதி குறித்து ஆய்வுச் செய்யும் ஸ்டாக்ஹோமின் SIPRI என்ற அமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாடு உற்பத்திச் செய்யும் ஆயுதங்களுள் 52 விழுக்காடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன எனவும் கூறுகிறது.

உலகின் மொத்த ஆயுத உற்பத்தியில் 75 விழுக்காடு, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா என்ற 5 நாடுகளில் இருந்து மட்டும் வருவதாகவும், இவ்வாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு, குறைந்தபட்சம் 98 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதியைச் செய்துள்ளதாகவும், இதில் போர் விமானங்கள், ஏவுகணைகள் போன்றவை அடங்கும் எனவும், மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2019, 15:44