தேடுதல்

Vatican News
விலங்குகளின் உடல் பாகங்களை விற்கும் சீன மருந்து கடை விலங்குகளின் உடல் பாகங்களை விற்கும் சீன மருந்து கடை  (AFP or licensors)

பூமியில் புதுமை : மனிதன் வாழ்கிறான், மிருகம் மடிகிறது

உலக நாடுகளில் அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி, எறும்புத்தின்னி என நம்பப்படுகிறது. ஆண்டுதோறும், ஏறத்தாழ, ஒரு இலட்சம் எறும்புத்தின்னிகள், காடுகளில் பிடிக்கப்பட்டு, ஒரு சில நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இன்று, உலகம் முழுவதும், மிருகங்கள் கொலை செய்யப்பட்டு, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. இந்தியாவில் அதிகமாக இருந்த எறும்புத்தின்னி என்ற மிருகத்தை உதாரணாக எடுத்துக்கொள்வோம். பாவமான, எந்த வம்புக்கும் போகாத இம்மிருகம், அழகாக, மெதுவாக, நடந்துசெல்லும். இவை, 30 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை, கிண்டி தேசிய பூங்காவில் சுதந்திரமாக நடந்து திரிந்தன. இப்போது, இவை, எங்குமே பார்க்கக் கிடைப்பதில்லை. காரணம், சில நாடுகளில் மருந்துகள் தயாரிப்பதற்காக, இவை கடத்தப்படுவதுதான். ஏனைய விலங்குகளை விட, எறும்புத்தின்னிதான் இந்த வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வித்தியாசமான தோற்றமுடைய இந்த எறும்புத்தின்னி, அதனுடைய இறைச்சி, மற்றும், செதில்களுக்காக, சில நாடுகளில், அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது. உலக நாடுகளில் அதிகமாகக் கடத்தப்படும் பாலூட்டி, இந்த எறும்புத்தின்னி என நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒரு இலட்சம் எறும்புத்தின்னிகள், காடுகளில் பிடிக்கப்பட்டு, சில நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இது தவிர, காண்டா மிருகம், கடல் ஆமை, புலி போன்ற பல மிருகங்களின் உறுப்புகள் மருத்துவக்குணங்கள் உள்ளவை என்பதால், அந்த விலங்கினங்களும்  கொல்லப்படுகின்றன.

01 March 2019, 14:55