தேடுதல்

ஆயுதம் ஏந்திய சூடான் நாட்டு சிறுவர் ஆயுதம் ஏந்திய சூடான் நாட்டு சிறுவர் 

தென் சூடானில் 19,000 சிறார் படைவீரர்கள்

தென் சூடானில் ஆயுதம் தாங்கியுள்ள சிறார் விடுவிக்கப்படவேண்டும் என, பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் யுனிசெஃப் அமைப்பு, இதுவரை 3000க்கும் மேற்பட்ட சிறார்களின் விடுதலைக்கு உதவியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் சூடான் நாட்டில், 19,000 சிறார், ஆயுதம் ஏந்தி போரிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, யுனிசெஃப் அமைப்பு தன் அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறார்களை இராணுவ வீரர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான உலக நாள் இச்செவ்வாய்க்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, செய்தியொன்றை வெளியிட்டுள்ள யுனிசெஃப் எனும் ஐ.நா.வின் சிறார் நல நிதி அமைப்பு, 2013ம் ஆண்டு. அந்நாட்டில் உள்நாட்டுப்போர் துவங்கியதைத் தொடர்ந்து, 19.000 சிறார். ஆயுதம் தாங்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரம் சிறார் இப்போரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

தென் சூடானில் ஆயுதம் தாங்கியுள்ள சிறார்கள் விடுவிக்கப்படவேண்டும் என, போரிடும் குழுக்களுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் யுனிசெஃப் அமைப்பு, இதுவரை 3000க்கும் மேற்பட்ட சிறார்களின் விடுதலைக்கு உதவியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 955 சிறார்கள் விடுதலையடைந்துள்ளனர் என்பதும், இதில் 265 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2019, 16:18