தேடுதல்

சிரியாவில் நடைபெறும் கிறிஸ்மஸ் ஆர்த்தடாக்ஸ் வழிபாடு சிரியாவில் நடைபெறும் கிறிஸ்மஸ் ஆர்த்தடாக்ஸ் வழிபாடு 

சிரியாவில் மீண்டும் ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலம்

சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சேதமாக்கப்பட்ட ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலத்தை, அரசு நிதியுடன் கட்டி எழுப்ப அரசுத்தலைவர் ஆசாத் உறுதி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2014ம் ஆண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சேதமாக்கப்பட்ட ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலத்தை, அரசு நிதியுடன் கட்டி எழுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார், சிரிய நாட்டு அரசுத்தலைவர், பாஷார் அல் ஆசாத்.

ஆர்மேனிய தொழிலதிபர்கள் சிரிய அரசுத்தலைவர் ஆசாத் அவர்களை அண்மையில் சந்தித்தபோது, சிரியாவின் Deir ez-Zor என்ற நகரில் அமைந்துள்ள இத்திருத்தலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக அரசுத்தலைவரின் உறுதி வழங்கப்பட்டது.

1915ம் ஆண்டுக்கும் 1916ம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், Ottomon நிலப்பகுதியில் மறைசாட்சிகளாக உயிரிழந்த ஆர்மேனியர்களின் நினைவாக, 1991ம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்ட இத்திருத்தலக் கோவில், 2014ம் ஆண்டில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அழிவுக்குள்ளானது.

2017ம் ஆண்டு, Deir ez-Zor நகரை, அரசு இராணுவம் கைப்பற்றியுள்ள போதிலும், இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதாக Fides செய்தி நிறுவனம் கூறுகின்றது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2019, 16:21