தேடுதல்

Vatican News
 சிலே பூர்வீக இனத்தவர் சிலே பூர்வீக இனத்தவர்   (AFP or licensors)

2019, பூர்வீக இனத்தவர் மொழிகள் ஆண்டு

உலக மக்கள் தொகையில், ஏறத்தாழ ஆறு விழுக்காட்டு பூர்வீக இனத்தவர், உலக மொழிகளில் நான்காயிரத்துக்கு மேற்பட்டவைகளைப் பேசுகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் பூர்வீக இனத்தவரின் மொழிகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், 2019ம் ஆண்டை, பூர்வீக இனத்தவர் மொழிகளுக்கென அர்ப்பணித்துள்ளது, ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

இந்த 2019ம் ஆண்டு முழுவதும், பூர்வீக இனத்தவரின் மொழிகளை ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் மற்றும், அவை சார்ந்த நிகழ்வுகளில் உலகினர் ஆர்வமுடன் பங்கெடுக்குமாறும், ஐ.நா. நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், 250 பூர்வீக இனத்தவரின் மொழிகள் உள்ளன எனினும், அவற்றில் ஏறத்தாழ 120 மொழிகளே இன்று பேசப்படுகின்றன என்றும், அவற்றில் ஏறத்தாழ 90 விழுக்காடு, அழியும் ஆபத்தில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று உலகெங்கும் உள்ள ஏறத்தாழ 6,700 மொழிகளில், 96 விழுக்காடு, மூன்று விழுக்காட்டு மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில், ஏறத்தாழ ஆறு விழுக்காட்டு மக்கள், பூர்வீக இனத்தவராக இருந்தாலும், அவர்கள், உலக மொழிகளில் நான்காயிரத்துக்கு மேற்பட்டவைகளைப் பேசுகின்றனர். இன்று அழிவை எதிர்நோக்கும் மொழிகளில் பெரும்பாலானவை, பூர்வீக இனத்தவரின் மொழிகள் எனச் சொல்லப்படுகின்றது. (UN) 

01 January 2019, 15:27