தேடுதல்

ஆப்பிள் தோட்டத்தில் இரஷ்ய தலைவர்கள் ஆப்பிள் தோட்டத்தில் இரஷ்ய தலைவர்கள் 

இமயமாகும் இளமை - நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்

நல்ல மனிதர்களை எந்தக் கடையிலும் வாங்க முடியாது. ஏனெனில் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டிய இடம் கடைகள் அல்ல

மேரி தெரேசா - வத்திக்கான்

தத்துவ மேதை சாக்ரட்டீஸ் அவர்கள், ஒரு நாள்  ஏதென்ஸ் மாநகரத்தின் ஒரு தெருவில் சென்றுகொண்டிருந்தார். எதிரே எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனை நிறுத்தி, தம்பி, இங்கே நல்ல ஆப்பிள் பழம் கிடைக்குமா? என்று கேட்டார் சாக்ரட்டீஸ். ஐயா, அந்தத் தெருவில் நல்ல நல்ல வித விதமான ஆப்பிள் கடைகள் உண்டு என்றான் துடிப்போடு. தம்பி, இங்கே நல்ல தேன் கிடைக்குமா? என்று இரண்டாம் முறையாகக் கேட்டார் சாக்ரட்டீஸ். சார், மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட, எந்த விதமான கலப்பிடமில்லாத சுத்தமான தேனும், அதே தெருவிலுள்ள கடைகளிலே வாங்கலாம் என்று சைகை காட்டினான் சிறுவன். தம்பி கடைசியாக ஒன்று கேட்கிறேன். இங்கே நல்ல மனிதர்களை வாங்க முடியுமா? என்று கேட்டார் சாக்ரட்டீஸ். சிறுவன் திகைத்தான். தனக்கேயுரிய பாணியில், அப்படிப்பட்ட கடையே இங்கு கிடையாது சார் என்று பதில் சொன்னான் சிறுவன்.

இளையோரே, நல்ல மனிதர்களை எந்தக் கடையிலும் வாங்க முடியாது. ஏனெனில் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டிய இடம் கடைகள் அல்ல, மாறாக, நல்ல குடும்பங்கள்தான். இளையோரே, நல்ல குடும்பங்களை உருவாக்குங்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2018, 15:44