தேடுதல்

Vatican News
வாடகை கார்களின் வரிசை வாடகை கார்களின் வரிசை  (AFP or licensors)

இமயமாகும் இளமை : வாடகை கார் பெண் ஓட்டுநருக்கு விருது

வாடகை கார் ஓட்டுநரான செல்வி, இன்று சொந்தமாக வாடகை கார் நிறுவனம் நடத்தி, முதல் பெண்மணி சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தென்னிந்தியாவின் முதலாவது பெண் வாடகை கார் ஓட்டுநரான, செல்விக்கு ’முதல் பெண்மணி’ விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் இவ்வாண்டில் வழங்கி கௌரவித்தார். இந்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களுக்கு ’முதல் பெண்மணி சாதனையாளர்கள்’ விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு முதல் பெண்மணிக்கான விருதுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து 112 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பெங்களூரைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் ஒருவர். தென்னிந்தியாவின் முதலாவது பெண் வாடகை கார் ஓட்டுநரான, செல்வி தனது 14வது வயதில் பெற்றோரால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர். அறியாத வயதில் கணவர் இழைத்த கொடுமையைத் தாங்க முடியாத செல்வி, தனது 18வது வயதில் கணவரைப் பிரிந்து விட்டார். அதன்பிறகு வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து தனது வாழ்க்கையை நடத்திய செல்வி, இன்று சொந்தமாக வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். செல்வியின் இந்த சாதனைக்காக அவருக்கு முதல் பெண்மணி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர், செல்விக்கு முதல் பெண்மணி விருதை வழங்கி கெளரவித்தனர்.

08 August 2018, 15:15