தேடுதல்

நாகசாகியில் அணு குண்டு போடப்பட்டதன்  73ம் ஆண்டு நிறைவு நாகசாகியில் அணு குண்டு போடப்பட்டதன் 73ம் ஆண்டு நிறைவு 

நாகசாகி, உலக அளவில் அமைதிக்கு தூண்டுதல்

“ஜப்பானில் அணு குண்டுகள் போடப்பட்டு 73 ஆண்டுகள் ஆகியும், இன்னும், அணு ஆயுத அச்சம் உலகில் நிலவுகிறது, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், அமைதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென, ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துகின்றன” : ஐ.நா.பொதுச் செயலர் கூட்டேரெஸ்

மேரி தெரேசா – வத்திக்கான்

ஜப்பானில் அணு குண்டுகளுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள், அமைதி மற்றும் ஆயுதக்களைவுக்கு, உலக அளவில் தலைவர்களாக மாறியுள்ளனர் என்று, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நாகசாகியில் அணு குண்டு போடப்பட்டதன் 73ம் ஆண்டு நிறைவு, ஆகஸ்ட் 09, இவ்வியாழனன்று, நினைவுகூரப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டேரெஸ் அவர்கள், நாகசாகி நகரம், தன் நீண்டகால கவர்ச்சிகரமான வரலாற்றினால் மட்டுமல்ல, அதோடு, மிகவும் பாதுகாப்பான ஓர் உலகை அமைப்பதற்கு வழிகளைத் தேடும் எல்லாருக்கும், தூண்டுதலான ஓர் உலகளாவிய நகரமாகவும் அமைந்துள்ளது என்று கூறினார்.

நாகசாகியின் அமைதி நினைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய, கூட்டேரெஸ் அவர்கள், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி அணு குண்டால் தாக்கப்பட்டபோது கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரை நினைவுகூரும் உங்கள் அனைவரோடும் இணைந்து, எனது ஆழ்ந்த மரியாதையை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

2017ம் ஆண்டில், உலகில் 1.7 டிரில்லியன் டாலர்களுக்கு மேல், ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்குமென செலவழிக்கப்பட்டுள்ளது. உலகில் பனிப்போருக்குப்பின், இந்த தொகை அதிகம் எனவும், இந்தத் தொகையைவிட, ஏறத்தாழ 80 மடங்கு, உலகளாவிய மனிதாபிமான உதவிக்குத் தேவைப்படுகின்றது எனவும், கூட்டேரெஸ் அவர்கள் கூறினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டால் ஏறத்தாழ எழுபதாயிரம் பேர் இறந்தனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2018, 15:43