தேடுதல்

Vatican News
அனைவரும் விரும்புவது அமைதியே அனைவரும் விரும்புவது அமைதியே  (AFP or licensors)

உத்திரப்பிரதேசத்தில் மத போதகர் மீது தாக்குதல்

கோவிலுக்குள் புகுந்த தெருநாயை விரட்டியதற்காக கிறிஸ்தவ போதகரின் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது

தங்கள் கோவிலுக்குள் நுழைந்த தெரு நாய் ஒன்றை வெளியே துரத்திய ஒரே காரணத்திற்காக உத்தர பிரதேசத்தின் மீரட் நகரின் பெந்தகோஸ்தே மதபோதகர் ஒருவரும் அவர் குடும்பமும் ஒரு குழுவால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மத சிறுபான்மையினருக்கு எதிராக அண்மை காலத்தில் அதிகரித்து வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், விலங்குகளின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் 30 பேர் கொண்ட குழு, இந்த மதபோதகரையும் அவர் மகனையும் தாக்கியுள்ளது.

நாயை கோவிலை விட்டு விரட்டிய நிகழ்ச்சி நடந்த மறு நாள், அவ்வூரில் சாக்கடையை சுத்தம் செய்யச் சென்ற மூன்று வாலிபர்கள் விஷ வாயு தாக்கி இறந்தது குறித்து துக்கம் விசாரிக்கச் சென்ற இந்த கிறிஸ்தவ போதகருடனும் அவர் மகனுடனும் வாக்குவாதம் செய்த கும்பல் ஒன்று, பின்னர் அவரின் வீட்டுக்குச் சென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

3 இளையோரின் இறுதிச்சடங்கிற்குப்பின் இடுகாட்டிலிருந்து திரும்பிய 30 பேர் கொண்ட குழு ஒன்று, போதகரின் வீட்டிற்குள் புகுந்து அவர் மனைவியையும் மகனையும் தாக்கியுள்ளது.

23 July 2018, 16:28