தேடுதல்

மாரத்தான் வீரர்கள் (கோப்புப்படம் 2019) மாரத்தான் வீரர்கள் (கோப்புப்படம் 2019) 

வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் உரோம் மாரத்தான்

"ஒற்றுமை" என்பதை தங்களது நிகழ்வின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்ட ரன் ரோம் என்னும் இந்த மாரத்தான் போட்டியானது 42 கி.மீ.195 செ.மீ தொலைவு கொண்டது

மெரினா ராஜ் - வத்திக்கான்

மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை உரோமில் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் வத்திக்கான் விளையாட்டு வீர்ர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். 110 நாடுகளில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 16 சனிக்கிழமை மாலை உரோமில்  உள்ள Ara Coeli திருத்தலத்தில் உரோம் உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் மாரத்தானில் பங்கேற்க இருக்கும் ஓட்டப் பந்தய வீரர்களுக்கான திருப்பலியில் ஓட்டப்பந்தய வீராங்கனை பெற்ற கோப்பை மற்றும் 4 தொடர் ஓட்டப்பந்தய வீரர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “அனைவரும் உடன்பிறந்தோரே”, “இறைவா உமக்கே புகழ்” ("Fratelli tutti" மற்றும் "Laudato Sì") என்னும் இரண்டு திருமடல்கள், நற்செய்தியின் மகிழ்ச்சி, கடவுளைப் புகழ்வோம் ("Evangelii gaudium", "Laudate Deum) என்னும் சுற்றுமடல் போன்றவற்றை அர்ப்பணித்து செபிக்க இருக்கின்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிமகாக எடுத்துரைக்கும் உடன்பிறந்த உணர்வு, ஒன்றிப்பு போன்றவற்றை அதிகமாக வலியுறுத்தும் விதமாக, வத்திக்கான் விளையாட்டு அமைப்பு மாரத்தான் விளையாட்டு அமைப்புடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது.    

"ஒற்றுமை" என்பதை தங்களது நிகழ்வின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்ட ரன் ரோம் என்னும் இந்த மாரத்தான் போட்டியானது 42 கி.மீ.195 செ.மீ தொலைவு கொண்டது. முதல் 5 கிமீ அனைத்து மக்களும் பங்கேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரோமின் கொலோசேயம் அருகில் தொடங்கி 42 கிமீ தூரத்தை ஓட்டப்பந்தய வீரர்கள் கடக்க உள்ளனர்.

மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளுர் நேரம் காலை 8. 30 மணியளவில் நடைபெற உள்ள இப்போட்டியில் ஏறக்குறைய 2500 தன்னார்வலர்கள் இந்நிகழ்வு நன்முறையில் நடைபெற தங்களது ஆதரவை வழங்க உள்ளனர். 200 மாரத்தான் பயிற்சி பெற்ற ஓட்டப்பந்தயவீர்கள் ஏறக்குறைய 15 நாடுகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 15:40