தேடுதல்

Scholas Occurrentes என்ற கல்வி இயக்கம் Scholas Occurrentes என்ற கல்வி இயக்கம்  (Vatican Media)

25 இலட்சம் மாணவர்களுக்கு உதவும் Scholas Occurrentes இயக்கம்

பல்வேறு நாடுகளில் பரவியுள்ள Scholas Occurrentes என்ற கல்வி இயக்கத்திற்கு, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான Seville பல்கலைக்கழகத்தின் விருது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அர்ஜெண்டீனாவில் துவக்கப்பட்டு, இன்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ள Scholas Occurrentes என்ற கல்வி இயக்கத்திற்கு, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான Seville பல்கலைக்கழகத்தின் விருது வழங்கப்படுகிறது.

Juan Antonio Carrillo Salcedo என்றழைக்கப்படும் இம்மனித உரிமைகள் விருது ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல், சமூக மற்றும் கல்வித்துறையில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்காக உழைப்பவர்களுக்கு, அதாவது தனியார்கள் மற்றும் இயக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது இதுவரை இஸ்பெயின் நாட்டு அரசி சோபியா, Zaragoza மேயர் பெதரிக்கோ, Marcelino Oreja, Adela Cortina என்னும் நான்கு பேருக்கே வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் துவக்கப்பட்ட Scholas Occurrentes கல்வி இயக்கம் 2013ஆம் ஆண்டு திருப்பீட நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதன்  10ஆம் ஆண்டு நிறைவுறும் வேளையில், இஸ்பெயினின் மிகப்பழமையான கல்வி நிறுவனமான Seville பல்கலைக்கழகத்தின் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மற்றும் இளையோரின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் Scholas Occurrentes இயக்கம் ஆற்றிவரும் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது, 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இளையோரிடையே அவர்களின் மன நலம் தொடர்புடையவைகளில் சிறப்பு உதவிகளை வழங்கியுள்ளது இந்த கல்வி இயக்கம்.

இன்று இந்த கல்வி இயக்கம் 190 நாடுகளில் கல்வி நிலையங்களின் உதவியோடு 25 இலட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளையும் கல்வி உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2023, 14:43