தேடுதல்

பாலஸ்தீன-இஸ்ராயேல் தாக்குதலின் விளைவுகள் பாலஸ்தீன-இஸ்ராயேல் தாக்குதலின் விளைவுகள்  (AFP or licensors)

உலகம் மக்கள் ஒன்றுபட்டு போர்நிறுத்தத்திற்கு குரல் கொடுப்போம்

அகில உலக காரித்தாஸ் அமைப்பு உலகளாவிய நடவடிக்கை தினத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

மனிதாபிமானப் பேரழிவு மற்றும் அப்பாவிகளின் உயிரிழப்புகளைத் தடுக்க, காசா மற்றும் இஸ்ரேயலில் உடனடிப் போர்நிறுத்தத்திற்கான வெளிப்படையான அழைப்புக்கு ஆதரவாக டிசம்பர் 18-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய செயல் தினத்தில் அகில உலக காரித்தாஸ் அமைப்பு இணைந்துள்ளது.

இக்கூட்டமைப்பில் 162 தேசிய காரித்தாஸ் அமைப்புகள் இணைந்துள்ளன, இதில் காரித்தாஸ் மோனா (மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா) மற்றும் காரித்தாஸ் எருசலேம் ஆகியவை அடங்கும்.

இந்த மனு உலகளவில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியது மற்றும் ஏற்கனவே 3.5 மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்களை சேகரித்துள்ளது.

இவ்வுலகளாவிய நடவடிக்கை தினத்தில் புனித பூமியில் உள்ள அனைத்து தரப்பினரையும் போர்நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதோடு, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு, இந்த கொடூரமான குண்டுவீச்சை நிறுத்துங்கள் என்று ஒரே உலகளாவிய குரல் கொடுக்கவும், புனித பூமியில் போரை நிறுத்த இஸ்ரேலையும் ஹமாஸையும் தலைவர்கள் வலியுறுத்த வேண்டுமென்றும்,  மோதலால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களையும் பாதுகாக்க, சர்வதேச சட்டத்தை கடைபிடிக்கவும், மனிதாபிமான அணுகல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும்,  அனைத்து பிணையக் கைதிகளை விடுவிக்கவும், காரித்தாஸ் அமைப்பின் தேசிய பொது செயலாளர் அலிஸ்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.

டட்டன் அவர்கள் அவர்கள் சமீபத்தில் இந்த அமைப்பு செயல்படும் West Bankல் உள்ள பெத்லகேம் மற்றும் ரமல்லாவுக்குச் சென்று எருசலேமில் காரித்தாஸ் ஊழியர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.  

இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மோதல் மிகவும் கொடூரமானது, 2.2 மில்லியன் மக்கள் காசா பகுதியில் பாதுகாப்பின்றி தத்தளிக்கின்றனர், மேலும்,  கிட்டத்தட்ட இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர், இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பிணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்துள்ளார் அவர்.

காசா முழுவதிலும் தடையற்ற பாதுகாப்பான மனிதாபிமான அணுகலை அவசரமாக வழங்கவும், மேலும் பெரிய அளவிலான நம்பகமான அடிப்படை உதவிச் சேவைகளை வழங்கிடவும் இவ்வமைப்பு  மேலும் அழைப்பு விடுக்கிறது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2023, 14:28