தேடுதல்

Bambino Gesù மருத்துவர்களுடன் கர்தினால் பரோலின் Bambino Gesù மருத்துவர்களுடன் கர்தினால் பரோலின் 

உரோம் குழந்தையேசு மருத்துவமனை சிறாருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து

உடல் உள்ள பலவீனங்கள், பிரச்சனைகள், கடினமான தருணங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஆதரிப்பது நமது கடமை என்பதை உணரவேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உங்களது வாழ்வால் பிறருக்கு சான்று பகருங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்கு அளித்த பணியினை, குழந்தைகளுக்கு வழங்கும் மருத்துவப்பணியின் வழியாக செய்து இயேசு  தன் சீடர்களிடம் ஒப்படைத்த பணிக்கு மருத்துவ பணியாளர்கள் சான்று பகர்கின்றார்கள் என்றும், உடல்நலமற்ற சிறாருக்கு உதவுவதன் வழியாக மறைமுகமாக நற்செய்திப் பணியினை ஆற்றுகின்றார்கள் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் இருக்கும் சிறாருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறார் ஒவ்வொருவரையும் சந்தித்து பரிசுப்பொருள்கள் மற்றும் அன்பான வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், அருள் நிறைந்த மரியே செபத்தை அவர்களோடு இணைந்து செபித்து ஆசீர் வழங்கினார்.

இறுதியாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்து அவர்களது மிகச்சிறப்பான பணிக்கு தன் நன்றியினைத் தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பங்களுடன் நமது உடனிருப்பை நெருக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உடல் உள்ள பலவீனங்கள்,பிரச்சனைகள், கடினமான தருணங்கள், போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஆதரிப்பது நமது கடமை என்பதை உணரவேண்டும் என்றும், நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் நம்பிக்கையை வழங்கும் காரணியாக மருத்துவர்கள் செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

Jacqueline Arabella de Fitz-James Salviati என்ற உயர்குடியைச் சார்ந்த பெண் ஒருவரது முயற்சியால், 1869ம் ஆண்டு நிறுவப்பட்ட உரோம் குழந்தை இயேசு மருத்துவமனை தற்போது, யோர்தான், பாலஸ்தீனம், மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகள் உட்பட, உலகின் 12 நாடுகளில் கிளைகளுடன் இயங்கி வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2023, 13:57