தேடுதல்

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம். அசிசி புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம். அசிசி 

கிறிஸ்துமஸ் அன்று ஒளிபரப்பப்படும் இன்னிசைக் கச்சேரி

இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியானது அசிசியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் பேராலயத்தில் சனிக்கிழமை ஒளிப்பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 25 உரோம் உள்ளூர் நேரம் பகல் 12.25 மணியளவில் இத்தாலியின் ராய் 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போர் மற்றும் மோதல்கள் நிறைந்த முரண்பாடான நேரத்தில், இசையின் அழகு மற்றும் இணக்கத்தின் வழியாக, மனிதநேயம் என்பது படைப்பாற்றல், ஒத்துழைப்பு, மிக அழகான மெல்லிசைகளை இசைக்கக்கூடிய ஒரு சிறந்த இசைக்குழுவாக சாட்சியமளிக்கின்றது என்றும், ஒருவருக்கொருவர் இதனை நினைவூட்டுவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்  அருள்பணி Giulio Cesareo OFM.

டிசம்பர் 16 சனிக்கிழமை கிறிஸ்துமஸ் அன்று ஒளிபரப்பப்பட உள்ள இன்னிசைக் கச்சேரி நிகழ்வு பதிவுசெய்யப்பட உள்ள நிலையில் இவ்வாறு கூறினார் புனித பிரான்சிஸ் அசிசியார் துறவற இல்லத்தின் தகவல் தொடர்பு அலுவலக இயக்குனர் அருள்பணி Giulio Cesareo OFM.

புனித பிரான்சிஸ் அசிசியார் பாடுவதை அதிகமாக விரும்பியவர் என்றும், சில சமயங்களில் தனது இதயத்தில் ஆறுதலை உணர வயலின் இசைக்கருவியை வாசிக்கும் பழக்கம் உடையவர் என்றும் கூறினார் அருள்பணியாளர் Giulio 

டிசம்பர் 25 ஆம் தேதி ராய் 1 இத்தாலிய தொலைக்காட்சி வழியாக நம் ஒவ்வொருவர் இல்லங்களை அடையும் இந்த இன்னிசை நிகழ்வானது, உலகம் முழுவதையும் புதியதாகவும், மனித உடன்பிறந்த உணர்வுடன் காணும் பொதுவான கனவினை கடவுளின் கனவினை, தங்கள் இதயங்களில்  ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுமப்பதாகவும் இருக்கட்டும் என்றும் கூறினார் அருள்பணி Giulio  

CHARLES CASTRONOVO என்னும் அமெரிக்க பாடகர் பங்கேற்கும் 38ஆவது கிறிஸ்துமஸ் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியானது அசிசியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் பேராலயத்தில் டிசம்பர் 16 சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஒளிப்பதிவு செய்யப்பட உள்ள இந்த இன்னிசை நிகழ்ச்சியானது டிசம்பர் 25 உரோம் உள்ளூர் நேரம் பகல் 12.25 மணியளவில் அதாவது திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி எனும் ஊருக்கும் உலகுக்கும் வழங்கும் செய்தியைத் தொடர்ந்து இத்தாலியின் ராய் 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதன்பின் மீண்டும் டிசம்பர் 25 இரவு 9.15 மணிக்கு ராய் 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.  

ராய் தொலைக்காட்சி மற்றும் இந்தேசா சன் பவுலோ வங்கி இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2023, 10:11