தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம் வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம்   (ANSA)

வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் 9 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் இத்தாலியின் Rieti மற்றும் Macra பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்  28 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டது.

நவம்பர் 23 வியாழன் காலை இத்தாலியின் பியமோந்தே Macra பகுதியில் உள்ள Valle Maira விலிருந்து கொண்டுவரப்பட்டு வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரமானது 65 குவிண்டால் எடை கொண்டது.

நவம்பர் 21 செவ்வாய்க்கிழமை பியமோந்தே நகராட்சி மற்றும் போக்குவரத்து உதவியுடன் புறப்பட்டு நவம்பர் 23 வியாழன் காலை உரோம் வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தது இவ்வாண்டிற்கான வத்திக்கான் கிறிஸ்துமஸ் மரம்.

பியமோந்தெயில் மரங்கள் மிக முக்கியமானவை, அவைகள் எளிதில் வெட்டப்படுவது கிடையாது. 56 வருட பழமையான இந்த மரமானது தீயணைப்பு வீரர்களின் பரிந்துரையின்படி வெட்டப்பட்டு வத்திக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் பியமோந்தே நகராட்சித்தலைவர் Alberto Cirio.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா மற்றும் ஏனைய விழாக்களுக்குப் பின் மரமானது காரித்தாஸ் உதவியுடன் துன்புறும் குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருள்கள் செய்ய ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மரமானது 7000 ஒளி விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட உள்ளதாகவும் பியமோந்தே பகுதியில் ஏற்படும் பனிப்பொழிவை  பிரதிபலிக்கும் வண்ணம் இம்மரமானது அடையாளப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆல்பர்தோ.    

டிசம்பர் 9 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் இத்தாலியின் Rieti மற்றும் Macra பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்விற்கு வத்திக்கான் நாட்டின் நிர்வாகத்துறையின் தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga அவர்கள் தலைமை தாங்க உள்ளார். காலையில் Rieti மற்றும் Macra பகுதி பிரதிநிதிகள் திருத்தந்தையை சந்தித்து அதிகாரப்பூர்வமாக இப்பரிசினை வழங்க உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2023, 11:39