தேடுதல்

கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின்  (ANSA)

பிணையக் கைதிகள் ஒப்பந்தம் மிக முக்கியமான ஒரு முன்னேற்ற படியாகும்

பிணையக்கைதிகளின் விடுதலை குறித்த ஓப்பந்தம், அமைதித் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருப்பீடச் செயலர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிணையக் கைதிகளின் விடுதலை பற்றி இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள்,  மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கான தீர்வு விரைவில் கிட்டும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம்  மற்றும் ஏறக்குறைய 50 பிணையக்கைதிகளின் விடுதலை குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது ஒரு முக்கியத்துவம் நிறைந்த முன்னேற்றப்படி என்றார் கார்தினால் பரோலின்.

பிணையக்கைதிகள் விடுதலையே இந்த மோதல்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும் வேளையில், அவர்களின் விடுதலை குறித்த ஓப்பந்தம், அமைதித் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கையை வெளியிட்டார் திருப்பீடச் செயலர்.

நவம்பர் 22 புதன்கிழமை இடம்பெற்ற மறைக்கல்வியுரையின் போது திருத்தந்தை   பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீன குழு ஒன்றையும், இஸ்ரேல் குழு ஒன்றையும் சந்தித்து அவர்களோடு உரையாடியது குறித்தும் தன் கருத்துக்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் கர்தினால் பரோலின்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2023, 15:15