தேடுதல்

2023.09.07 Premio Bresson 2023 Feds Venezia Cinema regista mario martone Paolo Ruffini

செவிமடுத்தல் மற்றும் ஒன்றிணைத்தலின் அனுபவமே ஒருங்கிணைந்த பயணம்

ஒருங்கிணைந்த பயணம் என்பது ஒரு கருத்து அல்ல, மாறாக செவிமடுத்தல் மற்றும் ஒன்றிணைத்தலின் அனுபவமாகும்!

ஜான் போஸ்கோ - வத்திக்கான்

ஆயர் மாமன்றம் என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் இடமல்ல, மாறாக செவிமடுக்கும், தேர்ந்து தெளியும் மற்றும் நமக்காக காத்திருக்கும் இறைவனை நோக்கி இணைந்து நடக்கும் இடமாகும், ஒருங்கிணைந்த பயணம் என்பது ஒரு கருத்து அல்ல, மாறாக செவிமடுத்தல் மற்றும் ஒன்றிணைத்தலின் அனுபவமாகும்! என்பன போன்ற கருத்துக்கள் ஆயர் மாமன்றத்தில் பகிரப்பட்டதாக எடுத்துரைத்தார் முனைவர் பவுலோ ருபீனி.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது செய்தியாளர்கள் கூட்டத்தின் நிறைவில் இவ்வாறு கூறிய திருப்பீட சமூகதொடர்புத்துறைத் தலைவர் முனைவர் பவுலோ ரூபினி அவர்கள், கலந்தாய்வு வரைவின் முதல் பகுதியில் இயேசு, திருஅவை, குடும்பம், ஒருங்கிணைந்த பயணம், செவிமடுத்தல், உறவு ஒன்றிப்பு, ஏழை, இளையோர், குழுமம், அன்பு போன்றவைகள் முதன்மை பெற்றிருந்ததாகவும் எடுத்துரைத்தார்.

திருஅவையின் பல்வேறு முகங்களை அனுபவிக்கும் இந்த அழகான தருணத்திற்காக திருத்தந்தைக்கு மாமன்ற பங்கேற்பாளர்கள் நன்றி தெரிவித்ததை எடுத்துரைத்த முனைவர் ருபீனி அவர்கள், 10 முதல் 12 பேர் கொண்ட பணிக்குழுக்களின் அறிக்கைகள் ஒவ்வொரு குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு, மாமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் அளிக்கப்பட்டன என்றும், இவைகள் ஆவண தொகுப்பு விவாதத்தின்போது மீண்டும் விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

திருஅவை அமைப்பின் அதிகாரமயமாக்கலை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, மாறாக திருஅவையின் ஆயிரமாண்டு வரலாறு மற்றும் உறவு ஒன்றிப்பில் பங்கேற்பதன் புதிய வடிவங்கள் மற்றும் புதிய இடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்வதில் அர்ப்பணிப்பு ஆற்றலின் முக்கயத்தும் ஆகியவை இம்மாமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார் ருபீனி.

இளையோர் மற்றும் டிஜிட்டல் யதார்த்தம்

இளையோர் பங்கேற்பின் தேவை வலியுறுத்தப்பட்டிருப்பதிலும் அறிக்கைகள் கவனம் செலுத்துகிறது, உதாரணமாக நவீன டிஜிட்டல் உலகினை கருத்தில் கொண்டு, அதிகார கருத்திலிருந்து சேவைக்கும், திருநிலையினர் ஆதிக்கத்தின் எந்தவொரு வடிவத்தையும் விலக்குதல், திருஅவை உறவு ஒன்றிப்பிற்குள் பொதுநிலையினர் மற்றும் பெண்களின் பங்களிப்பு, ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணியில் திருஅவை தன்னை எப்படி நிலைநிறுத்துகிறது போன்றவை குறித்த கேள்விகளும் இருப்பதாக எடுத்துரைத்த ருபீனி அவர்கள், மாமன்ற நடவடிக்கைகள் திருஅவையின் இரண்டு நுரையீரல்களான கிழக்கு மற்றும் மேற்கு இவற்றிற்கிடையிலான உறவிலும் கவனம் செலுத்தியது என்றும் குறிப்பிட்டார். 

மாமன்றத்தை வழிநடத்தும் ஆயன் திருத்தந்தை பிரான்சிஸ்

அக்டோபர் 7 சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில்  திருத்தந்தை அவர்கள் கலந்துகொண்டார் எனவும், கூட்டம் நடைபெறும் அறையில் முதலாவதாக வருபவர்களில் ஒருவராக திருத்தந்தை இருக்கிறார் எனவும் ருபினி அவர்கள் கூறினார். மேலும் திருத்தந்தை அவர்கள் ஊடக வல்லுநர்கள் வத்திக்கானின் நிகழ்வுகளை விவரிக்கும் முறைக்காக தனிப்பட்ட நன்றியினை தெரிவித்தததையும் குறிப்பிட்டார்.

இன்றைய திருச்சபைக்கான  இறைவனின் விருப்பதை தேடல்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கர்தினால் பெசுங்கு அவர்கள் இம்மாமன்றம் தனது நான்காவது மாமன்ற அனுபவம் என்றும், இம்மான்ற சபையானது எப்படி இதற்கு முந்தைய மாமன்றங்களிலிருந்து வித்தியாசப்பட்டுள்ளது என்பதனை குறிப்பிட்டார்: இம்மாமன்றம் திருஅவை வாழ்வின் நிகழ்கால வரலாற்றுத் தருணத்தில் இறைவிருப்ப தேடலுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்றும், யாரும் தங்களுடைய கருத்துக்களை திணிக்க இங்கு வரவில்லை. இறைவன் தன்னுடைய திருஅவைக்குக் கொண்டிருக்கும் விருப்பத்திற்கு செவிமடுக்கும் சகோதர சகோதரிகளாக நாம் வந்துள்ளோம் என்றும்,

இம்மாமன்றத்தின் வழியாக கிடைப்பது நற்கனிகளை கொடுக்கும் மற்றும் இறைவிருப்பமாகவும் ஏற்கப்படும் என்றும், தூயஆவிக்கு செவிமடுக்க நம்மையே கையளிப்பது தேவையான ஒன்றாகும் என்றும், 2024 வரையிலான இப்பயணத்தின் நோக்கம் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான சிறந்த பதில்களை தேடுவதும், அதன் முடிவாக இறைவிருப்பம் என்று நாம் கருதுவதற்கு மிக நெருக்கமான முடிவுகளை காண உதவும் செபம் மற்றும் மோதல்களுக்காக நன்றி செலுத்துவதும் ஆகும் என குறிப்பிட்டார் கர்தினால் பெசுங்கு. 

செபம்

உண்மையாகவே செபம் இல்லாமல் ஒருங்கிணைந்த பயணம் இல்லை என்ற கர்தினால் பெசுங்கு அவர்கள், திருஅவையாக  நாம் எப்போதும் தேர்ந்து தெளிதலில் இருக்கின்றோம், இதற்கு முடிவுப்புள்ளி என்பதே இல்லை என்று கூறினார். மேலும் செய்தித்தொடர்பாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பணிக்குழுக்களின் அறிக்கைகள் ஒருங்கிணைந்த பயணத்தின் இயக்கவியலை கருத்தில் கொண்டு வெளியிடப்படுவதில்லை எனவும் எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைந்த பயணத்திலிருந்து ஒரே கருத்து வெளிப்படுகிறது என்பதை வெளிப்படுத்த அனைத்து அறிக்கைகளின் தொகுப்பு வெளியிடப்படும் என்றும், இது மாமன்ற தலைமையகம் முடிவு செய்வதோ அல்லது மாமன்றத்தை நடத்துபவர்கள் முடிவு செய்வதோ இல்லை என்பதனை குறித்துக்காட்டி, பணிக்குழுக்கள் மற்றும் பொது செயலகத்திற்கும் இடையே ஒரு பரிமாற்றம் உள்ளது என்றும்  கூறினார் ருபீனி.

பிரச்சனைகளை கையாளுவதில் புதிய வழிமுறை

எல்ஜிபிடி குறித்த கேள்விக்கு பதிலளித்த கர்தினால் பெசுங்கு அவர்கள். ஒருங்கிணைந்த பயணம் குறித்த மாமன்றத்திற்காக நாம் இங்கு  இருக்கின்றோம். இத்தலைப்பிலிருந்து நான் விலகிச் செல்ல விரும்பவில்லை. ஒருங்கிணைந்த பயணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதல்ல, மாறாக இறைவன் நமக்காக காத்திருக்கும் கரையை நோக்கி இணைந்து நடப்பதாகும் என்றும், கூறினார்.

எல்ஜிபிடி விசயத்தில் நாம் செல்ல வேண்டிய திசையை இறைவன் ஒன்றிணைந்த தேர்ந்து தெளிதல் வழியாக காட்டுவார் என்றும், திருஅவையின் சார்பில் பிரச்சனைகளை கையாளுவதில் புதிய வழிகளை கண்டெடுப்பதை குறிப்பிட்ட நோக்கமாக கொண்டிருக்கும் இந்த மாமன்றத்தின்மீது மக்கள் கொண்டுள்ள மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளை மீண்டும் அளவிடும்படியும் கேட்டுக்கொண்டார்.

கருத்து அல்ல அனுபவம்

அகில உலக திருஅவை ஈடுபடும் இந்த மாமன்றத்தில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்த அருள்சகோதரி லெத்தீட்சியா சலசார் ஒருங்கிணைந்த பயணம் என்பது ஒரு கருத்து அல்ல. இது செவிமடுக்கும் அல்லது சேர்த்துக்கொள்ளப்படும் அனுபவம்  என்றார். புலம்பெயர்ந்தோர் குறித்த கருத்தினை தனது தனிப்பட்ட அனுபவம் வழியாகப் பகிர்ந்து கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2023, 13:10