தேடுதல்

பேராயர் Gabriele Giordano Caccia (கோப்புப்படம்) பேராயர் Gabriele Giordano Caccia (கோப்புப்படம்)  

அணுஆயுதக் குறைப்பை வலியுறுத்துகிறது திருப்பீடம்!

வளர்ந்து வரும் மோதல்கள் மத்தியிலும் அணு ஆயுதக் குறைப்பில் முன்னேற்றம் அடைய முடியும் என்ற நம்பிக்கைக்கு இன்னும் இடம் உள்ளது : பேராயர் Gabriele Caccia

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அணு ஆயுதக் குறைப்பை முன்னெடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளைத் திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார் ஐ.நா.விற்கான நிரந்தர திருப்பீட பிரதிநிதி, பேராயர் Gabriele Giordano Caccia

அக்டோபர் 17, இச்செவ்வாயன்று, நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 78-வது பொதுச் சபையின் (UNGA) முதல் குழுவில் ஆயுதக் களைவு மற்றும் அனைத்துலகப் பாதுகாப்பு விடயங்களில் உரையாற்றியபோது இவ்வாறு வேண்டுகோள் விடுத்தத பேராயர் Caccia அவர்கள், அனைத்துலகச் சமூகம், முக்கிய உடன்படிக்கைகளை நிராகரித்து தவறான திசையில் நகர்ந்து செல்கின்றது என்று தனது பெரும் வருத்தத்தையும் பதிவு செய்தார்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் NPT-இன் 11-வது மறுஆய்வு மாநாட்டிற்கான ஆயத்தக் குழுவின் முதல் அமர்வில், அதிகரித்த துருவமுனைப்பு மற்றும் அவநம்பிக்கையின் அளவுகளில் திருப்பீடத்தின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் பேராயர் Caccia.

மேலும், வளைந்துகொடுக்கும் தன்மை  மிகவும் தேவைப்படும் நேரத்தில், அதற்கு வாய்ப்பு இல்லாதது 2026-ஆம் ஆண்டில் ஒருமித்த கருத்தை நோக்கி செயல்படுவதற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார் பேராயர் Caccia

எனவே, தற்போதைய கீழ்நோக்கிய சுழலை மாற்றியமைக்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்றும் அணு ஆயுதங்களை மொத்தமாக அகற்றுவதற்கு வழிவகுக்கும் ஆயுதக் குறைப்பு வழிமுறைகளைப் புதுப்பிப்பதற்குத் தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அனைத்து நாட்டு மாநிலக் கட்சிகளுக்கும்  திருப்பீடத்தின் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் இந்தப்  பொறுப்பு அணு ஆயுதங்களை அகற்றுவது வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பேராயர் Caccia அவர்கள், அவற்றின் பேரழிவு தரும் மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை, அணுசக்தி நாடுகள், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள், இராணுவம் மற்றும் தனியார் துறைகள், அத்துடன் மதச் சமூகங்கள், குடிமைச் சமூகங்கள் மற்றும் அனைத்துலக அமைப்புகள், மற்றும், அனைத்து பங்குதாரர்கள் உட்பட அனைவருக்குமிடையே  ஒரு உரையாடலை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அச்சுறுத்தும் அனைத்து சொல்லாட்சிகளுக்கும் (rhetoric) திருப்பீடத்தின் தெளிவான கண்டனத்தை வெளியிட்ட பேராயர் Caccia அவர்கள், அத்தகைய அச்சுறுத்தல்கள் பதட்டங்களையும் ஆபத்துகளையும் அதிகரிக்கின்றன என்றும் இவை மனிதகுலத்தை பேரழிவின் பள்ளத்தாக்கில் வைக்கின்றன என்றும் எடுத்துக்காட்டினார். 

இறுதியாக, இது சம்பந்தமாக, அணு ஆயுதத் தடை தொடர்பான ஒப்பந்தத்தின் (TPNW) மாநிலக் கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டுவதற்கு திருப்பீடம் தனது விருப்பதைத் தெரிவிக்கின்றது என்றும்,  மறுஆய்வு செயல்முறையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான NPT பணிக்குழுவின் ஆலோசனைகளையும் அது  வரவேற்கிறது என்றும் கூறினார் பேராயர் Caccia

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2023, 13:54