தேடுதல்

உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் கர்தினால் பரோலின் உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் கர்தினால் பரோலின் 

புனித பூமியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு

யூத கிறிஸ்தவ உறவுகளுக்கு அர்த்தம் கொடுக்கும் புதிய ஆதார ஏடுகள் திருத்தந்தை 12ஆம் பயஸின் ஆட்சிக்காலத்தில் இருந்து கிட்டியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புனித பூமியில் இடம்பெறும் போரால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றுள்ளோர் குறித்து தன் அனுதாபங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ளதாகவும் அறிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

யூத கிறிஸ்தவ உறவுகளுக்கு அர்த்தம் கொடுக்கும் புதிய ஆதார ஏடுகள் திருத்தந்தை 12ஆம் பயஸின் ஆட்சிக்காலத்தில் இருந்து கிட்டியுள்ளது குறித்து உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பேசியபோது இவ்வாறு கூறினார் கர்தினால் பரோலின்.

யூதர்களின் சாபத் என்னும் ஓய்வு நாளான அக்டோபர் 7ஆம் தேதி இடம்பெற்ற பாலஸ்தீனிய தாக்குதல் குறித்து இக்கருத்தரங்கின் துவக்க உரையில் எடுத்துரைத்த கர்தினால், இம்மோதல்களில் உயிரிழந்தோரின் குடும்பங்கள், காயமடைந்த ஆயிரக்கணக்கானோர், காணாமல்போயுள்ளோர், கடத்தப்பட்டு பேராபத்தில் இருப்போர் ஆகியோர் குறித்து திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர்களுடன் தன் நெருக்கத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

புனித பூமியில் அனைத்து ஆயுதங்களும் மௌனமாக்கப்பட்டு, இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என ஆவல் கொள்வதாகவும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2023, 15:09