தேடுதல்

பொதுச் சபையில் கர்தினால் Jean-Claude Hollerich (கோப்புப்படம்) பொதுச் சபையில் கர்தினால் Jean-Claude Hollerich (கோப்புப்படம்) 

நமது பணிக்கான உறுதிப்பாட்டை நாம் புதுப்பிக்க வேண்டும்

இந்த அமர்வின் முடிவிற்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் தங்கள் பணியின் பலன்களுடன் தங்கள் தலத்திருஅவைகளுக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள் : கர்தினால் Hollerich

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பங்கேற்பு, ஆளுகை, அதிகாரம் என்னவிதமான செயல்முறைகள், கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்பதில் கவனம் செலுத்தி, அடுத்த தொகுதியை முன்வைப்பதற்கு முன், பொதுச் சபையின் உறுப்பினர்கள் தங்கள் பணிக்கான அர்ப்பணிப்பைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich.

உலக ஆயர்கள் மாமன்றம் கூட்ட நான்காவது கட்டப் அமர்வில் தனது கருத்துகளை சமர்ப்பித்தபோது இவ்வாறு கூறிய இவ்வாயர்கள் மாமன்றத்தின் தொடர்புத் தலைவர் கர்தினால் Hollerich அவர்கள், பொதுச் சபையின் முதல் அமர்வு, செயல்முறையின் சமமான முக்கியமான கட்டத்தின் தொடக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பதையும் நினைவுபடுத்தினார்.

இந்த அமர்வின் முடிவிற்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் தங்கள் பணியின் பலன்களுடன் தங்கள் தலத்திருஅவைகளுக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும், அடுத்த ஆண்டு தங்கள் தேர்ந்துதெளிதல்களை நிறைவு செய்வதற்கான கூறுகளை தங்களுக்கு வழங்கும் உள்ளூர் செயல்முறைகளுடன் வருமாறும் விளக்கினார் கர்தினால் Hollerich.

பரிசீலிக்கப்பட வேண்டிய அடுத்த தொகுதியை முன்வைத்த  கர்தினால் Hollerich அவர்கள், "இந்த உலக ஆயர்கள் மாமன்றம் அதன் விளைவாக உணரக்கூடிய மாற்றங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்" என்று குறிப்பிட்டார்.

மறைப்பணி சீடத்துவம் அல்லது இணை பொறுப்பு என்பது கேட்பதற்கு வெறும் சொற்றொடர்கள் மட்டுமல்ல, ஆனால், அது உறுதியான செயல்முறைகள், கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுடன், ஒன்றிணைந்த பயணத்தின் உணர்வில் உண்மையாகப் பணியாற்றும் நாம் ஒன்றாக உணரக்கூடிய ஒரு அழைப்பு என்றும் கூறி தனது சமர்ப்பித்தலை நிறைவு செய்தார் கர்தினால் Hollerich.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2023, 14:00