தேடுதல்

ஜெனீவா மனித உரிமைகளுக்கான ஐ நா அவை ஜெனீவா மனித உரிமைகளுக்கான ஐ நா அவை 

மனித மாண்பில் வேரூன்றப்பட வேண்டிய மனித உரிமைகள்

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை மற்றும் சிறப்பு நிறுவனங்களின் அலுவலகத்தின் புதிய நிரந்தர கண்காணிப்பாளராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2023 ஜூன் 21 அன்று நியமிக்கப்பட்டார் பேராயர் Ettore Balestrero.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனிதனின் பொதுவான மற்றும் பிரிக்க முடியாத மாண்பில், மனித உரிமைகள் வேரூன்றி வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு மரியாதையும் மதிப்பையும் வழங்க கற்பித்தல், வேறுபாடுகளை வரவேற்கும் திறன் கொண்ட அன்பு, மனித மாண்பிற்கு முன்னுரிமை ஆகியவை அனைவருக்கும் கட்டாயம் தேவை என்றும் கூறியுள்ளார்   பேராயர் Ettore Balestrero,

செப்டம்பர் 11 திங்கள் கிழமை தொடங்கி அக்டோபர் 13 வரை நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் வேளையில் அதில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்      திருப்பீடத்தின் சார்பாக புதிய நிரந்தர கண்காணிப்பாளராகப் பங்கேற்கும் காங்கோ குடியரசின் திருப்பீடத்தூதுவர் பேராயர் எத்தோர் பலஸ்த்ரெரோ.

2023 ஆம் ஆண்டில், பன்னாட்டுச் சமூகமும் சங்கமும் உலகளாவிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் "மனித உரிமைகள் என்பது பன்னாட்டு சமூகத்தின் ஒருமித்த கருத்தின் வழியாக தனிநபர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல" என்றும் கூறியுள்ளார் பேராயர்.

மனித உரிமைகள், மனிதனின் வளர்ச்சிக்கு அவசியமான புறநிலை மற்றும் மதிப்புகளை அடையாளப்படுத்துகின்றன என்று கூறிய பேராயர் எத்தோர் பலேஸ்த்ரெரோ அவர்கள், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை மற்றும் சிறப்பு நிறுவனங்களின் அலுவலகத்தின் புதிய நிரந்தர கண்காணிப்பாளராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2023 ஜூன் 21 அன்று நியமிக்கப்பட்டார்.

"75 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது சகோதர சகோதரிகள் பலர் போர், மோதல், பஞ்சம், தவறான எண்ணம், பாகுபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவது எவ்வளவு துயரமானது" என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் அவர்கள், பன்னாட்டு சமூகம் மனித உடன்பிறந்த உணர்வின் ஆற்றல் இன்றி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னுரிமை விருப்பத்தை ஏற்றுக்கொள்வது, அவர்களின் உலகளாவிய உரிமைகளை ஆதரிப்பது, பொது நன்மைக்கு பங்களிக்க அனுமதிப்பது போன்றவைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பேராயர் எத்தோர் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2023, 12:37